150 ஆண்டு பழமையான அருள்மிகு வீரமல்லம்மாள்-மல்லிகார்ஜுனர் திருக்கோயில் கும்பாபிஷேகம் – ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம்
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள காமயகவுண்டன் பட்டியில் 150 ஆண்டு பழமையான அருள்மிகு வீரமல்லம்மாள், அருள்மிகு மல்லிகார்ஜுனர் திருக்கோயிலில் நூதன அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது முதல் நாள் நேற்று கணபதி ஹோமத்துடன் முதல்கால பூஜை துவங்கி யாகசாலையில் 4கால பூஜைகள் மங்கள வாத்தியம் விஷ்ணு ஷஹஸ்ர ராமம் சேவித்தல், விஷ்வச்சேனர் பூஜை, வர்ண கலச பூஜை, வாஸ்து ஹோமம், குடும்ப அலங்காரம், துவாரபாலகர் பூஜை, ஆச்சாரியார்கள் வேத மந்திரம் ஓத நடைபெற்றது அதனைத் தொடர்ந்து நவம்பர் 2 ஆம் தேதி காலை கடம் புறப்பாடாகி கும்ப கலசத்தின் மீது ஆச்சாரியர்களால் தீர்த்தங்கள் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது
பக்தர்கள் மீது கும்பாபிஷேகம் செய்யப்பட்ட புனித நீர் தெளிக்கப்பட்டது கும்பாபிஷேகத்திற்கு கம்பம், சுருளிப்பட்டி, அணைப்பட்டி, காம யகவுண்டன்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்
வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்
தேனி மாவட்டம் வாட்சாப் குழுவில் இணைய
இந்நிகழ்வை திருப்பணிக்குழு மற்றும் விழாக்கமிட்டியாளர்கள்சரவணன்,முருகேசன், மணிகண்டன்,ராஜா, சுகுமார், பிரவின், கணேசன்,பாபு,வீரபாகு வீரய்யா சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது




0 கருத்துகள்