தேனி: சமூக ஆர்வலர்கள் படுகொலை செய்யப்படுவதை தடுப்பதற்காக தனி சட்டம் இயற்ற வேண்டும் என்று நாடாளும் மக்கள் கட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேனி அருகே வீரபாண்டியில் நாடாளும் மக்கள் கட்சி சார்பில் ஆறாம் ஆண்டு துவக்க விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது நிறுவனத் தலைவர் அக்னி செல்வராஜ் பங்கேற்று சமூக ஆர்வலர்கள் படுகொலை செய்யப்படுவதை தடுக்க தனி சட்டம் இயற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்
தேனி அருகே வீரபாண்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நாடாளும் மக்கள் கட்சி சார்பில் ஆறாம் ஆண்டு துவக்க விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.தேனி வடக்கு மாவட்ட தலைவர் ஜான் கில்பர்ட் ராஜ் ,தேனீ தெற்கு மாவட்ட தலைவர் பொன் செல்வம் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் புதுச்சேரி தேசிய செயலாளர் காசி,மாநிலக் கொள்கை பரப்பு செயலாளர் தாமோதரன், மாநில அமைப்பாளர் ராஜேந்திரன்,மாநில மகளிர் அணி செயலாளர் சுசிலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்
மேலும் இந்த விழாவில் நாடாளும் மக்கள் கட்சியின் நிறுவன தலைவரும் தேசிய தலைவரும் ஆகிய அக்னி செல்வராஜ் பங்கேற்று சிறப்புரையாற்றினார் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில்
தமிழ்நாடு முழுவதும் ஏராளமான சமூக ஆர்வலர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள் . இதனால் சமூக ஆர்வலருக்கென்று தனி பாதுகாப்பு சட்டம் உருவாக்க வேண்டும் ,தமிழ்நாடு முழுவதும் பஞ்சமி நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது எஸ்சி எஸ்டி பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் நிலங்களை மீட்டு உரியவர்களுக்கு வழங்க வேண்டும் ,தமிழ்நாடு முழுவதும் மூன்று சதவீதம் பழங்குடி மக்கள் எஸ்டி சான்றிதழ் இல்லாமல் வாழ்ந்து வருகிறார்கள் எஸ் டி சான்றிதழ் தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் , பனங்கள்ளு தென்னங்கள்ளு இறக்க தடை உள்ளது தடையை நீக்கிட வேண்டும், கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகள் கொண்டு வந்து விளைநிலங்களில் கொட்டுவதால் நிலத்தடி நீர் மற்றும் விளை நிலங்கள் பாதிக்கப்படுவதால் அதை தடுத்து நிறுத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டியும் , சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் உள்ள தொழிற்சாலைகளை மூட வேண்டும் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக கூறினார் .மேலும் அவர் கூறும் பொழுது
நாடாளும் மக்கள் கட்சி கட்சியின் தேசத்தின் வளர்ச்சிக்காக பாடுபடும் எந்த கட்சிகள் இருந்தாலும் அவருடன் கூட்டணி வைக்க தயார் என்றும், 2021 சட்டமன்றத் தேர்தலில் சிறு சிறு கட்சிகளை இணைத்து போட்டியிட்டோம் , 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 13 இடங்களில் போட்டியிட்டோம் ,இந்திய தேர்தல் ஆணையம் ஆட்டோ சின்னம் ஒதுக்கி இருந்தது . வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் தேசத்துக்காக பாடுபடும் கட்சிகள் கூட்டணிக்கு அழைத்தால் இணைந்து தேர்தலை சந்திப்போம் அப்படி அழைக்காவிட்டால் தனியாக தமிழ்நாடு கேரளா புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் தனித்து போட்டியிடுவோம் நிறுவனத்தலைவர் என்று ஜெ.அக்னி செல்வராசு தெரிவித்தார்.
மேலும் இந்த விழாவில் மாநில ஒருங்கிணைப்பாளர் பாலகுமாரன் மாநிலச் செயலாளர் அண்ணாமலை மாநில துணைத் தலைவர் கந்தசாமி தேனி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜ்குமார் ,தெற்கு மாவட்ட செயலாளர் ரகுமாறன் , தேனி மாவட்ட மகளிர் அணி தலைவி ஜீனத் ,தெற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் காமு ,மாவட்ட மகளிர் அணி செயலாளர் விஜயா மற்றும் மாநில மாவட்ட வட்டார கிளை நிர்வாகிகள். கலந்து கொண்டார்கள்




