தேனியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது
தேனியில் உள்ள தனியார் விடுதியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தேனி மாவட்டம் சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் தேனி மாவட்ட தலைவர் தேனி செல்வகுமார் தலைமையில் நடைபெற்றது
இந்தக் கூட்டத்தில் மாநிலத் துணை தலைவர் பெருமாள் ,மாநில இணை செயலாளர் காளிமுத்து ஆகியோர் முன்னிலை வைகித்தனர் மாவட்ட செயலாளர் திருவரங்கப் பெருமாள் வரவேற்புரை நிகழ்த்தினார் .மேலும் இந்த கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ எம் விக்ரம ராஜா பங்கேற்று சிறப்புரையாற்றினார் மேலும் அவர் வணிகர்களுக்கு தேவையான ஜிஎஸ்டி குறித்த விளக்கங்களையும்,,திடீரென்று சாலைகளில் உருவாக்கும் வணிக நிறுவனங்களை பற்றியும் ,நிரந்தர வணிக நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்றும் ,அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் வணிக நிறுவனங்களுக்கு அனைத்து பாதுகாப்பும்கிடைக்கும் என்றும் மற்ற மாவட்டங்களை விட தேனி மாவட்டத்தில் அதிக உறுப்பினரை கொண்ட சங்கமாக தேனி மாவட்டம் உள்ளது என்றும்,மேலும் தேனி மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் வணிக நிறுவனங்களுக்கு தேவையான அனைத்து வழிமுறைகளையும் கூறி செயல்படுத்தி வருகின்றனர் என்றும் தெரிவித்தார் .மாவட்ட பொருளாளர் அருஞ்சுனை கண்ணன் நன்றி உரை நிகழ்த்திய இந்த நிகழ்வில் மாவட்ட செய்தி தொடர்பாளர் வேல் முருகன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சர்புதீன் மாவட்டத் துணைத் தலைவர் முருகதாஸ் ஆகியோர் பங்கேற்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பினை செய்திருந்தார்கள் மேலும் இந்த நிகழ்வில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்டம் மாநில நகர ஒன்றிய இணைப்பு சங்கம், கிளைச் சங்கம் மற்றும் பகுதி செயலாளர்கள், இளைஞர் அணி நிர்வாகிகள் என ஏராளமான பங்கேற்றினார்


