பெரியகுளம் அருகே கைலாசபட்டி பகுதியில் சாலை மறியல்
தேனி, நவம்பர் 25: தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகாவுக்கு உட்பட்ட தென்கரை பேரூராட்சி, கைலாசபட்டியில் அமைந்துள்ள புகழ்பெற்ற கைலாசநாதர் கோயிலில் தலித் மக்களின் வழிபாட்டு உரிமைகள் திட்டமிட்டுப் பறிக்கப்படுவதாக கூறி பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் சாலை மறியல் நடைபெற்றது . இதனால் தேனி மாவட்ட நிர்வாகத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயிலின் முக்கிய நுழைவாயிலில் ஒரு குறிப்பிட்ட ஆதிக்க சாதியினர் தங்கள் சாதிப் பெயரைப் பொறித்து உள்ளதாகவும் தலித் சமூகத்தினர் கோயிலுக்குள் நுழையவும், அமைதியாக வழிபாடு செய்யவும் கடுமையான பாகுபாட்டை எதிர்கொண்டு வருவதாகவும்
ஜாதிப் பெயருடன் கூடிய அந்த கல்வெட்டை உடனடியாக அகற்றக் கோரி, கைலாசபட்டிப் பகுதிப் பொதுமக்கள் சார்பில், தேனி மாவட்ட ஆட்சியர், பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் (RDO), வருவாய் வட்டாட்சியர் (Tahsildar), மற்றும் தென்கரை காவல் நிலையம் ஆகிய அனைத்து அதிகாரிகளுக்கும் முறையாக மனு அளிக்கப்பட்டும்,தேனி மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் இந்த முக்கியமான சமூகப் பிரச்சினைக்கு எந்த ஒரு முக்கியத்துவமும் அளிக்காமல் அலட்சியம் காட்டி வருவதாகவும் கூறிகைலாசபட்டி ஊர் பொதுமக்க திரண்டு பிரமாண்டமான கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.



