தேனி அருகே வலம்புரி விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழா கோலாகலம்!
தேனி அருகே அம்பாசமுத்திரத்தில் பிரசித்தி பெற்ற வலம்புரி விநாயகர் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா பக்தர்களின் பரவச பக்தி கோஷங்களுடன் சிறப்பான முறையில் நடைபெற்றது
தேனி மாவட்டம் போடி சட்டமன்ற தொகுதியில் அம்பாசமுத்திரம் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் அருள்மிகு வலம்புரி விநாயகர் திருக்கோவில் அமைந்துள்ள நிலையில் கடந்த 2012 வது வருடம் கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில் 10வருடங்களுக்கு பிறகு தற்பொழுது கும்பாபிஷேக விழா ஏற்பாடுகள் நடைபெற்றன.
முதல் நாள் கும்பாபிஷேக விழாவில் மங்கல இசை விநாயகர் வழிபாடு நடைபெற்றது .தொடர்ந்து பட்டாளம்மன் திருக்கோவில் இருந்து பல நாட்கள் விரதம் இருந்து பல்வேறு புண்ணிய தீர்த்த தலங்கலிருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர், வலம்புரி விநாயகர் திருக்கோவிலுக்கு மங்கல இசை உடன் கொண்டுவரப்பட்டது.
இரண்டாம் நாள் கும்பாபிஷேக விழாவின் நிகழ்வாக யாகசாலை பூஜைகள், மகாதீப தாரனை நடைபெற்றது .தொடர்ந்து வலம்புரி விநாயகர் திருக்கோவில் மேல் உள்ள புனித கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி சிறப்பு அபிஷேகம் செய்து சிறப்பான முறையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. மேலும் புனித நீரை பல்வேறு கிராமங்களில் இருந்து வருகை புரிந்த பக்தர் பக்தர்கள் மேல் தெளிக்கப்பட்டது.
வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்
வலம்புரி விநாயகர் திருக்கோவிலில் உள்ள மூலவருக்கு சந்தனம் மஞ்சள் இளநீர் பால் உட்பட பல்வேறு அபிஷேக பொருட்கள் மூலம் அபிஷேகம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு ராஜா அலங்காரத்தில் வலம்புரி விநாயகர் காட்சி அளித்து அருள் புரிந்தார். பின்னர் வலம்புரி விநாயகருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த கும்பாபிஷேக விழாவில் அம்பாசமுத்திரம் கண்டமனூர் உட்பட பல்வேறு கிராமங்களில் இருந்து வருகை புரிந்த பொது மக்களுக்கு சிறப்பு அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்த விழாவுக்காண ஏற்பாடுகளை அம்பாசமுத்திரம் விநாயகர் நகர் கிராம பொதுமக்கள் சார்பாக விழா ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டு இருந்தது
தேனி மாவட்ட மக்களுக்கு என்றே தனி இணையதளம்.செய்திகள் விளம்பரங்கள் அனைத்தும் இலவசம் நீங்களும் படித்து மகிழுங்கள் உங்கள் நண்பர்களுக்கும் அனுப்பி வைத்து உங்கள் கிராம செய்திகளை தெரிந்து கொள்ள அனுப்பி வையுங்கள்























0 கருத்துகள்