தேனியில் திடீரென பற்றி எரிந்த கார் – அருகில் இருந்தோர் உயிர் தப்பினர்
தேனி பழைய பேருந்து நிலையத்திலிருந்து அன்னஞ்சி விலக்கு பகுதி வழியாக சென்ற கார் திடீரென பற்றி எரிந்தது தீயணைப்புத்துறையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அனைத்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது
தேனியை சேர்ந்த ஜோதி ராஜசேகரன் (24) என்பவர் முதலி அருகே நாகமலை புதுக்கோட்டை பகுதியில் உள்ள கார் மெக்கானிக் ஒர்க்ஷாப்பில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பராமரிப்பு பணிக்காக சிவகாசியை சேர்ந்த நபர் தன்னுடைய காரை இந்த ஒர்க்ஷாப்பில் விட்டுள்ளார்.
அந்த காரை பழுது பார்த்த பின் சோதனை ஓட்டத்திற்காக தேனிக்கு ஓட்டி வந்துள்ளார். தேனி புதிய பேருந்து நிலையத்திலிருந்து அன்னஞ்சி நோக்கி காரை ஓட்டி வந்துள்ளார் .
இரு புறமும் மலை பகுதியாக இருந்தது வந்த நிலையில் பைபாஸ் வழியாக செல்லும் போது அந்த காரின் முன் பகுதியில் எரியும் வாசனை மற்றும் புகை வந்துள்ளது. தன் ஓட்டி வந்த காரிலிருந்து புகை கிளம்பியதால் சுதாரித்து ஜோதி ராஜசேகரன் காரை விட்டு இறங்கி விட்டார் . பின்பு திடிரென அந்த கார் அதிக புகையுடன் எரிந்ததால் உடனடியாக ஜோதி ராஜசேகரன் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தந்து உள்ளார்.உடனடியாக தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இது குறித்து தேனி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்
தேனி மாவட்டம் வாட்சாப் குழுவில் இணைய
தேனி புதிய பே ருந்து  நிலையம் முதல் அன்னஞ்சி விலக்கு வரை வனப்பகுதியாக இருந்து வரும் நிலையில் திடிரென கார் பற்றி எரிந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது  



0 கருத்துகள்