ஆண்டிபட்டியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த சக்கம்பட்டி முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள சக்கம்பட்டியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த புகழ்பெற்ற சக்கம்பட்டி முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது
ஆண்டுதோறும் இங்கு நடைபெறும் சித்திரை திருவிழாவில் தேனி மாவட்டம் மட்டுமல்லாது அண்டை மாவட்டங்களில் இருந்தும் லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் கூடி நேர்த்திக்கடன் செலுத்தும் சிறப்புடையது
இக்கோவில் கும்பாபிஷேகம் ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று காலை நடைபெற்றது.அறநிலையத்துறைக்கு கட்டுப்பட்ட கோவிலில் கும்பாபிஷேக விழா மூன்று நாட்களுக்கு முன்பு விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது
இதையடுத்து ஐந்து கட்ட வேள்வி யாகசாலை பூஜை நடைபெற்று இன்று காலை கடங்கள் புறப்பாடு ஆகி சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் ஓத கலசத்தில் 108 புண்ணிய தீர்த்தங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனிதநீர் தெளிக்கப்பட்டதுஅப்போது ஆயிரக்கணக்கான கைகளில் காப்புகட்டி விரதம் இருந்த ஆண் பெண் பக்தர்கள் பயபக்தியுடன் அம்மனை வழிபட்டனர்
இதையடுத்து கூடியிருந்த பக்தர்களின் மீது நவீன டிரோன்கள் மூலம் புனிதநீர் தெளிக்கப்பட்டு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது இதன்பின்பு முத்துமாரி அம்மனுக்கு மகாதீபாரதனை காட்டப்பட்டது இதையடுத்து பத்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது ஆயிரக்கணக்கானோர் கூடிய விழாவில் அசம்பாவித சம்பவங்களை தடுக்க ஆண்டிபட்டி காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்

