தேனி பசுமை நகரில் கோலாகல கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: தொழிலதிபர் அந்தோணிதாஸ் குடும்பத்தார் ஏற்பாட்டில் மாற்று மதத்தினரும் பங்கேற்பு!
தேனி:
தேனி மாவட்டம், அரண்மனை புதூர் ஊராட்சிக்கு அருகில் உள்ள பசுமை நகரில், வரவிருக்கும் கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் விதமாக, தொழில் அதிபர் திரு. அந்தோணிதாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நேற்று (டிசம்பர் 14, 2025) கோலாகலமாக நடைபெற்றது.
குடும்ப வழக்கப்படி விழா ஏற்பாடு
தொழிலதிபர் திரு. அந்தோணிதாஸ், அவரது மனைவி திருமதி. வனிதா மேரி, மற்றும் மகள் மிஸ்டிகா மிஷேல் ஆகியோர் அவரது குடும்பத்தினர், ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடினர் வருகின்றனர். இதன் முன்னோடியாக, வரும் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பெருவிழாவை முன்னிட்டு, இந்தப் பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. செய்யப்பட்டது.
பாஸ்டர் பிரைட்லின் ஜோ மற்றும் அவரது துணைவியார் ரூத் மேரி தலைமையில் இந்த கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.
மகிழ்ச்சி பொங்க ஆடல் பாடல்
இந்த நிகழ்வில் பசுமை நகர் மற்றும் அந்த அக்கம் பக்கத்தில் உள்ள கிறிஸ்தவ மதத்தினர் மட்டுமின்றி, மாற்று மதத்தினர் பலரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.
பாஸ்டர் பிரைட்லின் ஜோ அவர்கள் ஜெபக்கூட்டம் நடத்தி அனைவருக்கும் ஆசி வழங்கினார். இந்த விழாவில் பங்கேற்ற அனைவரும் மகிழ்ச்சி பொங்க ஆடல், பாடல்களுடன் இயேசு கிறிஸ்துவை ஆராதித்து ஆரவாரத்துடன் மகிழ்ந்தனர். குறிப்பாக, குழந்தைகள் மத்தியில் உற்சாகத்தை அதிகரிக்கும் வகையில், மிக்கி மவுஸ் பொம்மைகளுடன் கொண்டாட்டமும் நடைபெற்றது.
அறுசுவை விருந்துடன் உபசரிப்பு
விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும் தொழிலதிபர் திரு. அந்தோணிதாஸ் அவருடைய மனைவி வனிதா மேரி மற்றும் அவரது குடும்பத்தினர் சார்பில் அறுசுவை தேநீர் மற்றும் சுவையான கேக் வழங்கப்பட்டது. மேலும், கிறிஸ்துமஸ் தாத்தா சாக்லேட்டுகளை வழங்கி சிறுவர்களை உற்சாகப்படுத்தினார்.
சமத்துவத்தை வலியுறுத்தும் விதமாக கிறிஸ்தவ மதத்தினர் மற்றும் மாற்று மதத்தினர் எனப் பலரும் ஒரே இடத்தில் திரண்டு கொண்டாடிய இந்த கிறிஸ்துமஸ் வரவேற்பு நிகழ்ச்சி, பசுமை நகர் பகுதியில் மிகுந்த மகிழ்ச்சியையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தியது.


