Type Here to Get Search Results !

தேனி மாவட்ட குரும்பர் (குருமன்ஸ்) இனச் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம் தேனியில் நடைபெற்றது

theni today News 0

தேனி மாவட்ட குரும்பர் (குருமன்ஸ்) இனச் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம் தேனியில் நடைபெற்றது 


தேனி பெரியகுளம் சாலையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஒன்றிணைந்த தேனி மாவட்டம் குரும்பர் (குருமன்ஸ்) இனத்தின் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது



இந்தக் கூட்டத்தில் தேனி மாவட்டத்தில் ஒரு மாவட்ட அமைப்பு உருவாக்கியும் ,அதன் மூலம் செயற்குழு ,மாவட்டம், ஒன்றிய ,பொதுக்குழு, ஆலோசனைக் குழு மூலம் மாவட்டம் மற்றும் ஒன்றிய தலைவர் செயலாளர் பொருளாளர் ஆகியவர்களை தேர்வு செய்து நிலையான மாவட்ட அமைப்பின் மூலம் இளைஞர் அணி ,மகளிர் அணி அறக்கட்டளை உருவாக்கி அதன் மூலம் சங்கத்தின் வளர்ச்சி, அரசியலில் பங்கு ,நீண்ட நாள் கோரிக்கையான பழங்குடி (ST) சான்று பெறுவது குறித்து முடிவு எடுப்பது குறித்தும் ஆலோசனை நிகழ்த்தப்பட்டது மேலும் கல்வி சேவை அமைப்பதற்காக தேனி மாவட்டத்தில் அலுவலகம் அமைத்து ,எஸ் டி சான்றிதழ் பெறவும் ,

சமுதாயத்தின் பெயரில் மண்டபம் கட்டுவது குறித்தும் இந்த மண்டபம் கட்டுவதற்கான நிதி ஆதாரம் எவ்வாறு உருவாக்குவது குறித்தும், கம்பளி நெசவு ஆலை அமைத்திடவும் ,ஒவ்வொரு வருடமும் பத்தாம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு பரிசுத்தொகை மற்றும் பரிசளிப்பு விழா நடத்துவது குறித்தும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆலோசனை நிகழ்த்தப்பட்டது.


இந்த கூட்டத்தின் ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் குழு சார்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது இதில் ஒன்றிணைந்த தேனி மாவட்ட குரும்பர் (குருமன்ஸ்)சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.