தேனியில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போட்டோ ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக போட்டோ ஜியோ சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் மாவட்ட தலைவர் குபேந்திரன் செல்வம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமுல்படுத்த வேண்டும் ,கருணை அடிப்படையில் 5% மேல் பணி நியமனம் செய்யக்கூடாது என்ற உச்ச வரம்பினை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், தலைமைச் செயலகம் முதல் அனைத்து துறைகளும் உள்ள அனைத்து பிரிவு காலி பணியிடங்களை நிரப்பி பதிவு உயர்வினை வழங்க வேண்டும் ,சத்துணவு அங்கன்வாடி ஊர் புறநூல்கர்,மருத்துவமனை பணியாளர்கள் பல்வேறு பணியாளர்களுக்கு சிறப்பு கால முறை ஊதியம் மதிப்பூதியம் தொகுப்பூதியம் வழங்க வேண்டும்,
மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலை நீர் தேக்க தொட்டி இயக்குபவர்கள் தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்களுக்கு கால முறை ஊதியம் வழங்கிட வேண்டும் உட்பட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



