தேனி: ஆண்டிபட்டி MLA மகாராஜனுக்கு எதிராக முற்றுகை! வனத்துறை தடையால் தாமதமான தார் சாலை, பாலம் திட்டங்களை நிறைவேற்ற மக்கள் வலியுறுத்தல்.
டிச,2-
கடமலைக்குண்டு மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மயிலாடும்பாறை கண்டமனூர், தேவராஜ்நகர், கடமலைக்குண்டு, வருசநாடு, உள்ளிட்ட பகுதிகளில் கனமழைக்கு ஊராட்சிக்கு சொந்தமான குடிநீர் குழாய்கள் சேதங்கள் மற்றும் ஆற்று வெள்ளச்சேதம் மற்றும் மண் வீடுகள் ஏதும் பாதிப்பு உள்ளதா? என்பது பற்றி ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜன் ஆய்வு பணியை இன்று அதிகாலை மேற்கொண்டு வந்துள்ளார் அப்பொழுது தகவல் அறிந்த மலைக்கிராம பொதுமக்கள்
மயிலாடும்பாறை கிராமத்திற்கு திமுக கட்சி அலுவலகம் முன்பு ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜன் அவர்களின் காரை கிராம பொதுமக்கள் முற்றுகையிட்டனர், இ தகவல் அறிந்து கடமலைக்குண்டு காவல்துறை இன்ஸ்பெக்டர் செல்வகுமாரி, எஸ்ஐ ஜெயபாலன், எஸ்பி தனிப்பிரிவு போலீசார் பாண்டீஸ்வரன், உள்ளிட்ட மயிலாடும்பாறை காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் பேச்சுவார்த்தை செய்தனர், இந்நிலையில் வருசநாடு முதல் வாலிப்பாறை கிராமம் வரை குண்டும் குழியுமான வனத்துறையால் தடை விதிக்கப்பட்டுள்ள சாலையை உடனே தார்ச்சாலையாக அமைத்திட வேண்டும், வருசநாடு அருகே தர்மராஜபுரம் மூல வைகை ஆற்றில் உடனே புதிய பாலம் கட்டிட 6.50 கோடி பணம் ஒதுக்கீடு செய்தும் நிறுத்தப்பட்டதை உடனே கட்டிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை திமுக அரசு கொடுத்திருந்தது ஏன் வனத்துறை தடையால் நிறைவேற்றவில்லை எனக்கோரி பொதுமக்கள் ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜனிடம் முற்றுகையிட்டு பேச்சுவார்த்தை செய்தனர், இதனைத் தொடர்ந்து இன்னும் 15 தினங்களுக்குள் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களை சந்தித்து தார் சாலை அமைப்பது பற்றியும் புதியமேம்பாலம் தர்மராஜபுரம் மூல வைகை ஆற்றின் குறுக்கே கட்டுவது உள்ளிட்ட கோரிக்கைகளை உடனே நிறைவேற்றுவதற்கு அனைத்து விதமான நடவடிக்கையும் எடுக்கப்படும் என பொதுமக்களிடம் ஆண்டிபட்டி எம் எல் ஏ மகாராஜன் மலை சமாதானம் செய்து அனுப்பினார், உடன் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் வக்கீல் சுப்பிரமணி, வடக்கு ஒன்றிய செயலாளர் தங்கப்பாண்டி, தும்மக்குண்டு பகுதி கிராம முக்கியஸ்தர்கள் சின்னகாளை, லிங்கம், புயல்மன்னன், ஜெயபால், பெருமாள், மருதுபாண்டி, ராஜா, ஈஸ்வரன், திமுக மாவட்ட பிரதிநிதி குறிஞ்சி மாடசாமி, மாவட்டஇளைஞரணி பிரபாகரன், ஒன்றிய இளைஞரணி பிரபாகரன் தொழில் புப்பிரிவு மயிலை பிரபு, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் எம் எஸ் மாடசாமி மச்சக்காளை, சிலம்பரசன், பெருமாள், ஜெயச்சந்திரன் உள்ளிட்ட திமுக கிளைக் கழக நிர்வாகிகள் ஊராட்சிக் கழக நிர்வாகிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.
படம் -மயிலாடும்பாறை கிராமத்தில் ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜன் காரை முற்றுகையிட்ட மலைக்கிராம பொதுமக்கள்.



