2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவை வெற்றியடைய செய்வோம் என ஆண்டிபட்டியில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் அதிமுகவினர் உறுதிமொழி ஏற்பு.
முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் 109 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஆண்டிபட்டி வைகை சாலை பிரிவில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு அதிமுகவினர் சார்பில் ஆண்டிபட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் லோகிராஜன் கிழக்கு ஒன்றிய செயலாளர் வரதராஜன் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தவசி ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கபட்டது.பின்னர் தேனி மதுரை தேசிய நெடுஞ்சாலையில் ஊர்வலமாக சென்ற அதிமுகவினர் நகரின் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்ட எம்ஜிஆரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்திய நிலையில் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவை வெற்றியடைய செய்து தலைமை செயலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக அமரவைப்போம் என்று எம்ஜிஆர் பிறந்தநாளில் ஒன்றிய செயலாளர் லோகிராஜன் தலைமையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
அதனை தொடர்ந்து எம்ஜிஆரின் 109 வது பிறந்த நாளை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கபட்டது. இந்த நிகழ்ச்சியில் உடன் பேரூர் செயலாளர் அருண்மதி கணேசன் உள்ளிட்ட அதிமுக மாவட்ட ஒன்றிய நகர பேரூர் கிளைக் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மேலும் அன்னதான ஏற்பாட்டினை எம்ஜிஆர் மன்ற நகர செயலாளர் வீரக்குமார் செய்திருந்தார்.



