தேனி மாவட்டத்தில் தனியார் பைனான்ஸ் ஊழியர்களால் உயிர் பலி ஏற்படுவதை தடுக்க வேண்டும் முன்னாள் எம்.எல்.ஏ P.V கதிரவன்
தேனியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் TUCC தொழிற்சங்கத்தின் தேனி மாவட்ட11 ஆவது மாநாடு நடைபெற்றது.தேனி வடக்கு மாவட்ட துணைத் தலைவர் பசும்பொன் முருகன் தலைமையிலும் வடக்கு மாவட்ட பொது செயலாளர் மாயாண்டி முன்னிலையிலும் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தேனி வடக்கு மாவட்ட பொருளாளர் கோட்டைசாமி வரவேற்புரை நிகழ்த்தினார். TUCC மாநில பொது செயலாளர் திருப்பதி மாநில தலைவர் நல்லமுத்து மாநில நிதி செயலாளர் மோகன் ஆகியோர் தொழிற்சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து சிறப்புரையாற்றினார்கள்.மத்திய கட்டுப்பாட்டு குழு தலைவர் முத்துராமலிங்கம், மாநில துணைத்தலைவர்கள் பசும்பொன்,இளங்கோவன் ,மாநில மகளிர் அணி செயலாளர் லட்சுமி மாயாண்டி ,மாநில செயலாளர்கள் ராஜா, பாஸ்கர பாண்டியன், இளையரசு, அசோக் அம்பலம் ஆகியோர் பங்கேற்ற இந்த நிகழ்வில்அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தமிழ் மாநில பொதுச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமாகிய PV கதிரவன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
மேலும்
தொழிலாளர் நல ஆணைய அலுவலர்கள் ஒவ்வொரு துறையிலும் வேலை பார்க்கும் ஊழியர்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு அறிவது இல்லை ,தேனி மாவட்டத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் மிகுந்த மன உளைச்சலில் உள்ளனர் என்றும் இதனால் தொழிலாளர்களின் குறைகளை நேரடியாக சென்று தொழிலாளர் நல ஆணையர் அதிகாரிகள் பார்வையிட வேண்டும் என்றும், தேனி நகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மீறு சமுத்திரம் கண்மாய் சுத்தப்படுத்தி சுற்றுலா பயணிகள் கவரும் வகையில் 7.40 கோடி திட்ட மதிப்பீட்டில் தமிழக அரசு ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வரும் நிலையில்,அந்தத் திட்டத்தினை விரைவாக செயல்படுத்தி அரசு நிதி ஒதுக்கீடு செய்த பணம் முறையாக அரசு அதிகாரிகளிடமும் ஒப்பந்ததாரர்களும் சென்று அடைகிறதா என்பதை உறுதி செய்ய சமூக அலுவலர் கொண்ட குழுவை மீறு சமுத்திர கன்மாய்க்காக மாவட்ட ஆட்சியர் கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும்,
தேனி நகரில் உள்ள பழைய அரசு மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கீடு செய்து முழு நேர மருத்துவமனையாக பொதுமக்கள் நலன் கருதி மாற்ற வேண்டும் எனவும் ,தனியார் பைனான்ஸ் மூலம் நீதி பெற்றவர்கள் ஒரு சில மாதங்களில் தவணை கட்ட முடியாத சூழல் ஏற்படும்போது பல்வேறு அவமானங்களுக்கு உள்ளாகி வரும் நிலையில் அவர்கள் குடும்பத்திற்கு காவல்துறை சார்பில் போதிய பாதுகாப்பு அளித்திட வேண்டும் ,தேனி மாவட்டத்தில் தனியார் பைனான்ஸ் ஊழியர்களால் உயிர் பலி ஏற்படுவதை தடுக்க வேண்டும், தேனி மாவட்டத்தில் கனிம கொள்ளை 24 மணி நேரமும் நடைபெற்று வரும் நிலையில் அரசு அனுமதி பெற்ற இடம் ஒன்று ,அனுமதி பெறாமல் பல இடங்கள் மண் அள்ளுவது கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் தேனி மாவட்ட ஆட்சியர் தனி கவனம் செலுத்தி கனிம கொள்ளை தடுப்பதற்கு சமூக அலுவலர்கள் கொண்டு தனி குழு அமைக்க வேண்டும் ,அனுமதி இல்லாமல் அனுமதி சீட்டு இல்லாமல் அள்ளுபவர்கள் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் ,தேனி நகர் பகுதியில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுமக்களும் தினந்தோறும் அதிகமான பொதுமக்கள் வருவதினால் கூட்டணி தெரிச்சல் ஏற்படுகிறது. இதனை தடுக்க போக்குவரத்து காவலர்கள் அனைத்து பகுதிகளுக்கும் தொடர்ந்து செல்ல வேண்டும் என்றும் ,காவலர்கள் அதிகளவு இல்லாத காரணத்தால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிறப்பு கவனம் செலுத்தி போக்குவரத்து நெருச்சலை கட்டுப்படுத்த வேண்டும்,தேனி நகர் பகுதிகளில் நகராட்சி சார்பில் குப்பைகள் அல்லாமல் பல நாட்கள் சுத்தப்படுத்தாமல் அங்கேயே இருப்பதினால் நோய் தொற்று அபாயம் ஏற்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் இந்தக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மேலும் இந்த கூட்டத்தில் தேனி வடக்கு மாவட்ட இணை செயலாளர் சரவணன், தேனி வடக்கு மாவட்ட துணை செயலாளகள் மது தேவன், வினோத் கண்ணன் மற்றும் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் TUCC நிர்வாகிகள் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்






