தேனியில் ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் கிராம நிர்வாக அலுவலருக்கான கல்வி தகுதியை பட்டப் படிப்பாக உயர்த்த வேண்டும் உட்பட ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்
இந்த காத்திருப்பு போராட்டமானது தேனி மாவட்ட தலைவர் பிரபு தலைமையிலும் மாவட்ட செயலாளர் ராஜ்குமார் முன்னிலையிலும் நடைபெற்றது .மாவட்ட பொருளாளர் குமரேசன் மாநில செயற்குழு உறுப்பினர் ராமர் ஆகியோர் பங்கேற்று போராட்டத்தின் கோரிக்கைகளை பற்றி சிறப்புரையாற்றினார்கள்.
கிராம நிர்வாக அலுவலகங்களில் கழிப்பறை, குடிநீர் மற்றும் இணைய வசதியுடன் நவீன மயமாக்க வேண்டும்.கிராம நிர்வாக அலுவலர்களுக்கான கல்வித் தகுதியைப் பட்டப்படிப்பாக உயர்த்த வேண்டும்.பத்தாண்டு பணி முடித்தவர்களுக்குத் தேர்வுநிலை கிராம நிர்வாக அலுவலர் என்றும், இருபதாண்டு பணி முடித்தவர்களுக்குச் சிறப்புநிலை கிராம நிர்வாக அலுவலர் என்றும் பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.பதவி உயர்வில் நிலவும் கால தாமதத்தைக் குறைத்து முறையான அரசாணை வெளியிட வேண்டும்,பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து திரளான கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.




