தேனியில் பயங்கரம்: பைனான்ஸ் அதிபர் வீட்டின் முன்பே வெட்டி கொலை - மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை!
தேனி: தேனி நகராட்சி அலுவலகம் அருகே பைனான்ஸ் தொழிலதிபர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் என்ன?
தேனி நகராட்சி அலுவலகம் எதிர் உள்ள ஆஞ்சநேயர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பழக்கடை பாண்டி (72). இவர் தேனி பகுதியில் பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். இன்று காலை, தனது இருசக்கர வாகனத்தில் ரேஷன் கடைக்குச் செல்லத் தயாரானபோது, அங்கு மறைந்திருந்த மர்ம கும்பல் அவரை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டியதாக தெரிகிறது.
இதில் கழுத்தில் பலத்த காயமடைந்த பாண்டி, ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். அலறல் சத்தம் கேட்டு வெளியே வந்த அவரது மனைவி, கணவர் ரத்தக் காயங்களுடன் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்தார்.
போலீஸ் விசாரணை தீவிரம்
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தேனி போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
- முன்விரோதம்: பைனான்ஸ் தொழிலில் கொடுக்கல் வாங்கல் தொடர்பான முன்விரோதத்தால் இந்த கொ@ நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
- CCTV ஆய்வு: கொலையாளிகள் எத்தனை பேர்? எந்த வழியாகத் தப்பிச் சென்றார்கள்? என்பது குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி (CCTV) காட்சிகளைப் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.


