தேனி அபிநயா பரதநாட்டிய பள்ளி மாணவர்களுக்கு ஆஸ்கார் உலக சாதனை பாராட்டு விழா!
தேனி: தேனி முல்லைப் பெரியாறு முத்தமிழ் மன்றம், என்.ஆர். அழகராஜா கல்வி அறக்கட்டளை மற்றும் தேனி மாவட்ட மக்கள் மன்றங்களின் கூட்டமைப்பு சார்பில், ஆஸ்கார் உலக சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்று சாதனை படைத்த தேனி அபிநயா பரதநாட்டிய இசைப்பள்ளி மாணவ மாணவியர்களுக்கு பாராட்டு மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.
தேனி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டல் கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்த விழாவிற்கு, மக்கள் மன்றங்களின் கூட்டமைப்பு தலைவர் வழக்கறிஞர் முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார். தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறை முன்னாள் தலைவர் ராஜமோகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
விருதுகளும் கௌரவமும்:
தேனி தனியார் பல் மருத்துவமனை மருத்துவர் பாஸ்கரன் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். விழாவில் மாங்கனி நகர் அரிமா சங்க வட்டார தலைவர் முகமது தமீம் ராஜா, தலைவர் செல்வகுமார், தேனி முல்லைப் பெரியாறு முத்தமிழ் மன்ற தலைவர் கணேசன் மற்றும் அபிநயா பரதநாட்டிய பள்ளி ஆசிரியர்கள் மனோகரன், கவிதா மனோகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஜானகிராம் டெக்ஸ்டைல்ஸ் மில் குரூப்ஸ் நிர்வாகிகள் அஜய் கார்த்திகை ராஜா மற்றும் ஆதித்ய சிவராமராஜா ஆகியோர் மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தனர்.
பாராட்டு பெற்ற சாதனை மாணவ - மாணவியர் பட்டியல்:
இந்த விழாவில் ஆஸ்கார் உலக சாதனை படைத்த பின்வரும் 35 மாணவ மாணவியர் கௌரவிக்கப்பட்டனர்:
| 1 | G. தீஷாணா | பரதம் |
| 2 | S.K. தனக்குழலி | பரதம் |
| 3 | P. ஸ்ரீவிஷ்ணுவர்த்தினி | குழல் |
| 4 | V. யாழ்மதியினியாள் | பரதம் |
| 5 | A. திருவாரக்சிதா | பரதம் |
| 6 | A. திருவாஹர்சிதா | பரதம் |
| 7 | G. கீதிகாஸ்ரீ | பரதம் |
| 8 | M. தன்யாஸ்ரீ | பரதம் |
| 9 | A. பார்கவி | பரதம் |
| 10 | S. வாசிகாஸ்ரீ | பரதம் |
| 11 | R. முத்துஅக்ஷயா | பரதம் |
| 12 | M. நவிஷாஸ்ரீ | பரதம் |
| 13 | L. முகிழ் இனியாள் | பரதம் |
| 14 | R. குழாலினி | பரதம் |
| 15 | J.R. துருவாரகா | பரதம் |
| 16 | J.R. யஷ்வந்த் | கீபோர்டு |
| 17 | R. ராஜாஅப்ராஜிதா | பரதம் |
| 18 | R. தீபாஹரிணி | பரதம் |
| 19 | S. பொண்பூர்ணிதா | பரதம் |
| 20 | A.M. கமளிக்கா | பரதம் |
| 21 | M. வேதபிரபா | பரதம் |
| 22 | V. மதுஸ்ரீ | பரதம் |
| 23 | M. சிவாணி | பரதம் |
| 24 | P. மகாகணிகா | பரதம் |
| 25 | P. பூர்மிகா | பரதம் |
| 26 | R. நேத்ரா | பரதம் |
| 27 | S. லாஷ்விக் | பரதம் |
| 28 | S. சித்விகா | பரதம் |
| 29 | S. விஷாகா | பரதம் |
| 30 | A. ஜீவனா | பரதம் |
| 31 | A. ஜீவித் | பாரதியார் வேடம் |
| 32 | K. ஜேஷ்னிகா | வேலுநாச்சியார் வேடம் |
| 33 | V. நாகலட்சுமி | பரதம் |
| 34 | B. சம்ருதா | பரதம் |
| 35 | R. ராஜாஅபிமன்யு | கீபோர்டு |
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு:
விழாவிற்கான ஏற்பாடுகளை என்.ஆர். அழகராஜா கல்வி அறக்கட்டளை நிர்வாகி பன்னீர்செல்வம் செய்திருந்தார். வெளிச்சம் அறக்கட்டளை நிறுவனர் நாணயம் சிதம்பரம் நிகழ்ச்சியினை மிகச்சிறப்பாக ஒருங்கிணைத்தார். இதில் பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள், கவிஞர்கள் மற்றும் கலை ஆர்வலர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு மாணவர்களை உற்சாகப்படுத்தினர்.








