தேனியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது
தேனி பழைய பேருந்து நிலையம் அருகே பொதுமக்களுக்கான இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.மதுரை தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை SDTU தொழிற்சங்கம் மற்றும் தேனி மாவட்டம் புது பள்ளிவாசல் ஜமாத் கமிட்டி இணைந்து நடத்திய இந்த இலவச கண் சிகிச்சை முகாமில் பொதுமக்களுக்கு கண் பார்வை குறைபாடுகள் / கிட்ட பார்வை, தூர பார்வை, கண்புரை , கண்ணில் சதை வளர்ச்சி ,கண்ணில் நீர் அழுத்தம், ஒற்றை தலைவலி மற்றும் கண் சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கப்பட்டது.
மேலும் இந்த முகாமில் பங்கேற்று சிகிச்சை பெறும் நபர்களுக்கு இலவசமாக கண் கண்ணாடியும் மருத்துவ உபகரணங்களும் வழங்கப்பட்டன. மேலும் தொழிற்சங்கத்தின் மாவட்ட தலைவர் தமீம் அன்சாரி ,மாவட்ட செயலாளர் அப்துல் வாஜிது,
, மாவட்ட பொருளாளர் அப்துல் காதர் கெய்லானி ,மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்ஏ காதர் சுல்தான், தேனி புதுப்பள்ளி வாசல் நிர்வாகிகள் தலைவர் சார்புதீன் துணைச் தலைவர் ஹபீ புல்லாஹ், ,முகமது பாட்ஷா, அஸ்லாம், எலைட் அகமதுகான் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் சார்பில் நடைபெற்ற இந்த கண் சிகிச்சை முகாமில் தேனி மாவட்டத்தை சேர்ந்த 150 பொதுமக்கள் பங்கேற்று பயனடைந்தனர் .
மேலும் இந்த நிகழ்வில் மருத்துவமனை பணியாளர்கள் SDTU தொழிற்சங்க நிர்வாகிகள் தேனி எஸ் டி பி ஐ கட்சி நிர்வாகிகள் தே னி புது பள்ளிவாசல் ஜமாத் கமிட்டி நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானவர்கள் பங்கேற்றனார்




