வருசநாட்டில் கோபுரம் பேக்கரி ஸ்வீட்ஸ் திறப்பு விழா
வருசநாடு கிராமத்தில் கோபுரம் பேக்கரி ஸ்வீட் கடை திறப்பு விழா நடைபெற்றது, இந்த விழாவில் டீ காபி ஒரு ரூபாய்க்கு மட்டும் வழங்கப்பட்டது, மேலும் அரை கிலோ ஸ்வீட் வாங்கினால் கால் கிலோ காரம் இலவசம் என்று ஆப்பர் அடிப்படையில் ஸ்வீட் வழங்கப்பட்டது
இதனால் வருசநாடு, சிங்கராஜபுரம், தர்மராஜபுரம், வைகை நகர்,பவளநகர் ,தங்கம்மாள்புரம், மயிலாடும்பாறை, வாலிப்பாறை, முறுக்கோடை ,தும்மக்குண்டு, ராயர்கோட்டை, உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் பொதுமக்கள் கலந்து கொண்டு வீடுகளுக்கு ஸ்வீட் காரம் வாங்கி சென்றனர், இந்த விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக எம் எஸ் வி கோகனட் நிறுவனத் தலைவர் குச்சனூர் வீரமணி தலைமை தாங்கி ரிப்பன் வெட்டி சிறப்பித்தார். மயிலாடும்பாறை வருசநாடு கோபுரம் கோக்கனட் நிர்வாகிகள் பன்னீர்செல்வம், சிவா, ஈஸ்வரன், அஜித்குமார், உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர், மேலும் கிராம முக்கியஸ்தர்கள் சுப்புராஜ், கணேசன், தர்மர், சரவணன், சேகர், பாண்டியராஜ், அப்பாஸ், ரகுமான், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


