தேனி அருகே கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த நபரால் பரபரப்பு
பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்று கூறுவார்கள் அந்த அளவிற்கு பாம்பை கண்டால் அனைவருக்கும் பயம் இருந்து கொண்டேதான் இருக்கும் .இந்நிலையில் தனது காலில் கடித்த பாம்பினை மருத்துவமனைக்கு எடுத்து வந்த நபரால் பரப்பு பரபரப்பு ஏற்பட்டுள்ளது தேனி மாவட்டம் கம்பம் அருகே புதுப்பட்டி சாஸ்தா கோவில் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் கோபி .இவர் கூலி வேலை செய்து வருகிறார்.
வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்
தேனி மாவட்டம் வாட்சாப் குழுவில் இணைய
இந்நிலையில் இவர் நேற்று முன்தினம் ஊத்துக்காடு பகுதியில் தனது நண்பர்களுடன் வேலையை முடித்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.புதுப்பட்டிக்கு வந்து கொண்டிருந்தபோது புதுப்பட்டிக்கும் ஊத்துக்காடுக்கும் இடையே வந்த போது ஒரு பாம்பின் மீது தனது இருசக்கர வாகனத்தில் தெரியமால் ஏற்றி உள்ளார் இதனால் அந்த பாம்பானது சுரேஷ் கோபியை கடித்துள்ளது தொடர்ந்து பாம்பு கடித்த வழியுடன் சுரேஷ் கோபி தனது நண்பர்களுடன் அந்த பாம்பினை பிடித்து கம்பம் அரசு மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக வந்திருந்தார்
அப்பொழுது அந்த பாம்பினை பார்த்த அக்கம் பக்கத்தினர் பயத்தில் அலறினார்கள்.கம்பம் அரசு மருத்துவமனையில் முதல் சிகிச்சை கொடுக்கப்பட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக சுரேஷ் கோபியை மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர் இந்நிலையில் தன்னை கடித்த பாம்புடன் சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு கூலி தொழிலாளி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது