Type Here to Get Search Results !

தேனி அருகே விவசாயி தோட்டத்தில் வாழைத்தார்கள் திருடிய இருவர் கைது

தேனி அருகே விவசாயி தோட்டத்தில் வாழைத்தார்கள் திருடிய இருவர் கைது 



தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியினால் எத்தனையோ பொருட்கள் புதிதாக உருவாக்கி விடலாம் .ஆனால் விவசாயத்தில் விளையும் விளை பொருட்களை உருவாக்க முடியாது அப்படிப்பட்ட விவசாயம்செய்வதற்கு விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை கையில் எடுத்து விவசாயம் செய்து வருகின்றனர் .ஒருபுறம் தண்ணீர் பிரச்சினை ,மற்றொருபுறம் விலை பிரச்சனை என்று பல்வேறு பிரச்சினைகளை சந்திக்கும் விவசாயிகள் ஒரு படியாக விவசாயத்தை நன்றாக மேற்கொண்டு மகசூல் வந்தவுடன் குறைந்த விலைக்கு விவசாய பொருட்களை விற்று தனது வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். இப்படி விவசாயிகள் பல்வேறு போராட்டங்களுக்கு பின் தனது விவசாய பொருட்களை விற்கும் நிலை ஏற்படும் நிலையில் நன்றாக விளைவித்த விவசாய பொருட்களை மற்றவர்கள் திருடி செல்வதினால் விவசாயின் மனது எப்படி இருக்கும் அந்த சம்பவம் தேனி அருகே நடைபெற்றுள்ளது.

தேனி மாவட்டம் கூடலூர் அருகே லோயர் கேம் பகுதியில் காமயகவுண்டன்பட்டி என்னும் கிராமத்தினை சேர்ந்தவர் முகேந்திர கண்ணன் .இவர் விவசாயி ஆவார்.இவர் தனது தோட்டத்தில் வாழைத்தார் சாகுபடி செய்து வந்துள்ளார் மேலும் விளைச்சல் வரும் பொழுது வாழைத்தார்கள் அடிக்கடி காணாமல் போவதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.இந்நிலையில் காவல்துறையினர் நேற்று சோதனையில் ஈடுபட்ட பொழுது வாழைத்தார்களை ஆட்டோவில் திருடி சென்றகம்பத்தை சேர்ந்த சிவனேசன் 27 ,கார்த்திக் 24, ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து வாழைத்தார்களை திருடுவதற்கு பயன்படுத்திய ஆட்டோவை பறிமுதல் செய்தும் ரூபாய் 60 ஆயிரம் மதிப்புள்ள70 வாழைத்தார்களை பறிமுதல் செய்தனர்


வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்






தேனி மாவட்டம் வாட்சாப் குழுவில் இணைய




 .மேலும் தப்பி ஓடிய குள்ளப்ப கவுண்டன்பட்டி சேர்ந்த சத்யா,கம்பம் பகுதியை சேர்ந்த சுரேஷ் ஆகியோரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

மேலும் இந்த விசாரணையில் ஏற்கனவே இரண்டு முறை அவர்கள் திருடி சென்றதும் ,தற்பொழுது மூன்றாவது முறையாக திருடி சென்றபோது போலீசார் கையில் பிடிபட்டனர். இதனால் ஒரு விவசாயின் தோட்டத்தில் புகுந்து வாழைத்தார்களை தொடர்ந்து திருடி வந்து இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
தேனி மாவட்டத்தின் திறவு கோல்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Top Post Ad

விளம்பரப் படம் - KST Store