ஆண்டிபட்டி அருகே அண்ணா கூட்டுறவு நூற்பாலை தினக்கூலி தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டம் .
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள அண்ணா கூட்டுறவு நூற்பாலையில் தின கூலி தொழிலாளர்களாக பணிந்து வரும் 263 பேர் பணியில் நிரந்தரம் செய்ய வலியுறுத்தி ஆண்டிபட்டி தேசிய நெடுஞ்சாலை எம்ஜிஆர் சிலை அருகே உண்ணாவிரத போராட்டத்தை நேற்று நடத்தினர். இந்த போராட்டத்திற்கு தேனி மாவட்ட பஞ்சாலை தொழிலாளர் சங்கம் சிஐடியு தலைவர் செல்வராஜ், செயலாளர் லட்சுமணதாஸ், பொருளாளர் கமல்ராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். சிஐடியு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் துவக்க உரை ஆற்றினார். பொது தொழிலாளர் சங்க தலைவர் வெங்கடேசன், மாவட்ட தலைவர் ஜெயபாண்டி, மாவட்ட பொருளாளர் சண்முகம், மாவட்ட துணை தலைவர் ராமர் மற்றும் கணேசன் ஆகியோர் உண்ணாவிரத போராட்டத்தை விளக்கி பேசினார்கள். தமிழ்நாடு பஞ்சாயத்து தொழிலாளர் சம்மேளன மாநில பொதுச் செயலாளர் அசோகன் நிறைவுறை ஆற்றினார்.
வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்
தேனி மாவட்டம் வாட்சாப் குழுவில் இணைய
அண்ணா கூட்டுறவு நூற்பாலை 1984 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. அப்போது 400 க்கும் மேற்பட்ட நிரந்தர தொழிலாளர்கள் பணி புரிந்து வந்தனர். தற்போது நிரந்தர தொழிலாளர் எண்ணிக்கை 35 பேர் மட்டுமே . கடந்த 2025ஆம் ஆண்டுக்குப் பின் தொழிலாளர்கள் நிரந்தரம் செய்யவில்லை . 200க்கும் மேற்பட்ட தினக்கூலி தொழிலாளர்களை வைத்து ஆலை இயங்கி வருகிறது. எனவே தொழிலாளர் சட்டப்படி 480 நாட்கள் பணிபுரிந்த அனைவரையும் நிரந்தர பணியாளர்களாக நியமனம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி அண்ணா கூட்டுறவு நூற்பாலை கூலி தொழிலாளர்கள் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

