ஆண்டிபட்டியில் விஜயதசமியை முன்னிட்டு பள்ளியில் புதிய மாணவர்கள் சேர்க்கை.
குழந்தைகளின் கையைப் பிடித்து எழுத துவக்கி வைத்த வித்யாரம்பம்
தேனிமாவட்டம் ஆண்டிப்பட்டி ஏத்தக்கோவில் சாலையில் அமைந்துள்ள டைமன் வித்யாலயா தனியார் பள்ளியில் இன்று விஜயதசமியை முன்னிட்டு குழந்தைகளுக்கு முதல் முதலில் கல்வி பயிற்றுவிக்கும் அக்ஷராப்பியாசம் எனப்படும் வித்தியாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.
வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்
தேனி மாவட்டம் வாட்சாப் குழுவில் இணைய
முன்னதாக பள்ளியில் சரஸ்வதி சிலை முன்பு நோட்டுப் புத்தகங்கள் விளையாட்டு உபகரணங்கள் இசை கருவிகள் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வைத்து யாகசாலை வளர்த்து
சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன
.இதைத்தொடர்ந்து பள்ளியில் முதன் முதலாக துவக்க கல்வியில் சேர்க்கப்பட்ட குழந்தைகளுக்கு பள்ளியின் தாளாளர் மாலை அணிவித்தார். பின்னர் குழந்தைகளின் நாவினில் தேனை கொண்டு அ என்ற முதல் எழுத்தை எழுதினார்.
இதைத்தொடர்ந்து பெற்றோர்களுடன் வந்த குழந்தைகள் கையைப் பிடித்துக் கொண்டு நெல்தானியம் வைக்கப்பட்டிருந்த தட்டுகளில் அ என்ற முதல் எழுத்தை எழுத கற்பித்தனர்.