ஒரு மாதமாகியும் நடவடிக்கை இல்லை: தேனியில் வெள்ளத்தால் 30 லட்சம் நஷ்டம் – விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்!
வெள்ள பாதிப்பு: அரசு அலட்சியம்!
தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள சுருளிப்பட்டி மணப்படை பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால், நீர்ப்பாசனக் கரை உடைந்து தண்ணீர் முழுவதும் விளைநிலங்களுக்குள் புகுந்தது.
இதனால் விளைநிலங்களில் இருந்த நெற்கதிர்கள், வாழை மரங்கள் ஆகியவை அதிக அளவில் அழிந்து சேதமடைந்தன.
₹30 லட்சம் நஷ்டம்: விவசாயி வேதனை
பாதிக்கப்பட்ட விவசாயிகள் இதுகுறித்து பொதுப்பணித்துறை (PWD) அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனப் பாதிக்கப்பட்ட விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
எங்கள் whatsapp குழுவில் இணைய
விவசாயிகள் பொதுமக்கள் மாணவர்கள் அனைவரும் இணைந்திட
வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY
தேனி மாவட்டம் வாட்சாப் குழுவில் இணைய
https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt
பாதிக்கப்பட்ட விவசாயி ஒருவர் பேசுகையில்:
கரை உடையும் தருவாயில் இருந்தபோதே பொதுப்பணித் துறையினருக்குப் பலமுறை தகவல் தெரிவித்தும், மனுவும் அளித்தோம். ஆனால், அவர்கள் கண்டுகொள்ளாததால், நாங்களே சொந்தப் பணத்தில் மண் மூட்டைகளை வைத்து கரைகளைச் சரிசெய்தோம்.
கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால், அந்தக் கரையும் உடைந்து, எங்கள் விளைநிலத்தில் இருந்த வாழை, நெல் போன்ற பயிர்கள் சேதமடைந்தன. சுமார் ₹30 லட்சத்திற்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இதுவரை பொதுப்பணித் துறையினரோ அல்லது தமிழக அரசோ நேரில் வந்து பார்வையிடவில்லை. எந்த நடவடிக்கையும் இல்லாததால், நாங்கள் விவசாய சங்கத்தினை நாடி உள்ளோம்.
விவசாயிகள் சங்கத்தின் போராட்டம்
இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட இடங்களை ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கத்தின் தலைவர் மனோகரன் தலைமையில் சங்கத்தினர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
பாதிக்கப்பட்ட இடத்திலேயே விவசாயிகள் சங்கத்தினர், பொதுப்பணித்துறை அதிகாரிகளையும் தமிழக அரசையும் கண்டித்து முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?
விவசாயிகள் சங்கத்தினர் மேலும் கூறுகையில், மீண்டும் தங்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்றால், மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கேள்வி: இனியாவது பொதுப்பணித்துறையினரும், வருவாய்த் துறையினரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் மற்றும் கரை சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வார்களா? என்று விவசாயிகள் மட்டுமல்லாமல் அனைவரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்




