தோட்டக்கலைப் பயிர்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து UATT 2.0 திட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் – தோட்டக்கலை துறை அலுவலர்கள் கோரிக்கை!
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தோட்டக்கலைத் துறை வளர்ச்சி மற்றும் திட்டங்கள் தொடர்பாக தமிழக அரசுக்கு தெரிவிற்கும் விதமாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
தோட்டக்கலைத் துறையின் நிலை :
தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 60% உள்ள விவசாயிகள்/விவசாயப் பெருமக்களுக்கு தினசரி வருமானத்தைக் கொடுத்து, வெளிநாட்டு ஏற்றுமதிகளின் மூலம் அந்நிய செலாவணியைச் ஈட்டித் தரும் துறையாக தோட்டக்கலைத் துறை விளங்குகிறது.
பயிரிடும் பரப்பளவு:
தமிழ்நாட்டில் 94 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.தோட்டக்கலைத் துறையின் வளர்ச்சி மற்றும் தனித்துவத்தை கருத்தில் கொண்டே, 1979 ஆம் ஆண்டு தனித்துறையாக மாற்றப்பட்டது.முன்னாள் முதல்வர் கலைஞர் ஆட்சியின்போது, 2007 ஆம் ஆண்டு (G.O.:537) அரசாணை மூலம், தோட்டக்கலைப் பெருமைக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட்டது. இந்தியாவின் மொத்த சாகுபடிப் பரப்பில் 13.5% மட்டுமே தோட்டக்கலைப் பயிர்கள் உள்ளபோதிலும், மொத்த உற்பத்தியில் 30.5%க்கு மேல் பங்களிக்கிறது.
எங்கள் whatsapp குழுவில் இணைய
விவசாயிகள் பொதுமக்கள் மாணவர்கள் அனைவரும் இணைந்திட
வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY
தேனி மாவட்டம் வாட்சாப் குழுவில் இணைய
https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt
100 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படும் தோட்டக்கலைப் பயிர்களில் இருந்து கிடைக்கும் உற்பத்தி மற்றும் வருமானம், ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படும் தானியப் பயிர்களின் உற்பத்தி மற்றும் வருமானத்தை விட 20 முதல் 30 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
லட்சக்கணக்கான விவசாயப் பெருமக்களின் 5 முதல் 10 சென்ட் பரப்பளவில் மேற்கொள்ளப்படும் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடியைத் தொழிலாக நம்பியுள்ளார்கள்.இதில் நிரம்பி வழியும் உழைப்பு, இடுபொருட்களின் தேவை, நீர்ப் பயன்பாடு, குளிர்ச்சி நிலை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவை காரணமாக, மற்ற தொழில்களை போல் இன்றி, இத்தொழில்நுட்பங்கள் ஆகியவை தனித்துவமானவை.
இப்போது நடைமுறையில் உள்ள UATT 2.0 திட்டமானது, முக்கியமாகத் தானியப் பயிர் சாகுபடி மற்றும் மழை நீரை மட்டும் கவனத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இது தோட்டக்கலைத் துறை வளர்ச்சிக்குப் பாதகமாக உள்ளது.
UATT 2.0 திட்டத்தின் பிற துறை அலுவலர்கள் தோட்டக்கலைத் தொழில் நுட்பங்களை விவசாயிகளுக்கு வழங்கும் போது, சரியான புரிதல் இன்றி எடுத்துரைப்பதால், விவசாய பயன் பெருமளவில் பாதிக்கப்படுகிறது. இதனால் தோட்டக்கலைப் பயிர் சார்ந்த தொழில்நுட்பங்களை, தோட்டக்கலை துறையில் தனித்துவப் பட்டயப் படிப்புப் படித்த துறையின் அலுவலர்களால் மட்டுமே விவசாயப் பெருமக்களுக்குத் தெளிவாகக் கொண்டு சேர்க்க முடியும்.
நாட்டின் வளர்ச்சி மற்றும் லட்சக்கணக்கான விவசாயப் பெருமக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதில் மிக முக்கியமான பங்காற்றி வரும் தோட்டக்கலைத் துறையின் வளர்ச்சியினை உறுதிப்படுத்த, தமிழக அரசு UATT 2.0 திட்டத்தில் தக்க மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் உதவி தோட்டக்கலை துறையின் மாநிலபொருளாளர் பழனிவேல் ராஜன் தலைமை தாங்கிய இந்த ஆர்ப்பாட்டத்தில் தோட்டக்கலை அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் மணிகண்டன் மாவட்ட செயலாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்த ஆர்ப்பாட்டத்தின் நோக்கத்தினை மாவட்ட பொருளாளர் மோகன்ராஜ் ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் மற்றும் ஆர்ப்பாட்டத்தின் விளக்க உரை நிகழ்த்தினார் இந்த ஆர்ப்பாட்டத்தில் 30க்கும் மேற்பட்ட நபர்கள் பங்கேற்று ஈடுபட்டனர்




