தேனி ஊராட்சி செயலாளர் பணிகளுக்குக் குவியும் விண்ணப்பங்கள்; ஒரு இடத்துக்கு 316 பேர் விண்ணப்பம்!
கால் ரூபாய் வேலையாக இருந்தாலும் அரசு பணியாக இருக்க வேண்டும் என்று அந்த காலம் முதல் இன்று வரை பழமொழி சொல்லப்பட்டு வருகிறது. ஏனென்றால் அரசு வேலை வேலை பார்க்கும் நபர்களுக்கு அரசு பணி என்ற பொறுப்பும் விடுமுறை நாட்கள் அதிகமாகவும் ஊதியம் அதிகமாகவும் பல்வேறு சலுகைகளும் இருந்து வருகிறது .இதனால் அனைவரும் அரசு வேலையை தேடி செல்கின்றனர் அதேபோல அரசு வேலைகளில் சேர்ப்பதற்காக பல்வேறு கோச்சிங் சென்டர்களும் அதிகமாக தமிழகத்தில் உருவாகி உள்ளது .பல்வேறு தேர்வுகள், பல்வேறு செய்முறை தேர்வுகள் எழுதி எப்படியாவது அரசு வேலையில் சேர வேண்டும் என்ற எண்ணத்தில் இளைஞர்கள் அதிகமாக படிப்பில் கவனம் செலுத்தி வருகின்றனர் அந்த அளவுக்கு அரசு வேலை என்றால் குதிரைக்கொம்பாக இருந்து வருகிறது என்று தற்பொழுது இளைஞர்கள் மத்தியில் நிலவி வருகிறது
தற்பொழுது தமிழக ஊராட்சி நிர்வாகம் சார்பில் தமிழக முழுவதும் ஊராட்சி செயலாளர்கள் பணியிடங்கள் நிரப்புவதற்காக உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது இதே போல் தேனி மாவட்டத்திலும் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்களும் வரவேற்கப்பட்டன
தமிழகம் முழுவதும் மொத்தம் 1450 பணி இடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் 9ந்தேதி அன்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் விண்ணப்பங்கள் அதிக அளவு வந்திருந்ததாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது
பத்தாம் வகுப்பு கல்வித் தகுதி என்ற அடிப்படையில் அறிவிப்பு வெளியிட்டு பட்டிருந்த நிலையில் தமிழகம் முழுவதும் ஏராளமான விண்ணப்பங்கள் வந்திருந்தது. 10 ஆம் வகுப்பு அடிப்படை தகுதி என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பட்டப்படிப்பு முடித்தவர்களும் இன்ஜினியர்கள் முடித்தவர்களும், என ஏராளமான விண்ணப்பங்கள் விண்ணப்பித்து இருந்தனர்
தேனி மாவட்டத்தில் 20 ஊராட்சி செயலாளர்கள் பணியிடங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் நவ - 9 வரை மொத்தம் 63 24 விண்ணப்பங்கள் வந்துள்ளதாக தகவல் வந்து உள்ளது
இது போன்ற அரசு திட்டங்கள் அரசு மானியங்கள் விவசாயிகளுக்கான தகவல்கள் உங்கள் கிராமத்தில் நடக்கும் நிகழ்வுகள்,மாணவர்களுக்கு பயன்பெறும் தகவல்கள் மற்றும் பல்வேறு தகவல்கள் தெரிந்திட
20 ஊராட்சி செய்வார்கள் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வந்ததில் ஒரு இடத்துக்கு 316 நபர்கள் விண்ணப்பித்து உள்ளனர்



