தேனியில் மகளிர் திட்டம் சார்பில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
தேனி மாவட்டம் முழுவதும் தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் பல்வேறு போட்டிகள் நடைபெற்று வருகிறது .இந்நிலையில் தேனி மாவட்ட மகளிர் திட்டம் சார்பில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது .மகளிர் திட்ட இயக்குனர் சந்திரா தலைமையில் நடைபெற்ற இந்த ஊர்வலத்தை பெரியகுளம் கோட்டாச்சியர் ரஜத் பீட்டன்
கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த ஊர்வலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த பாதைகளை ஏந்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள் .இந்த ஊர்வலம் தேனி பழைய பேருந்து நிலையத்தில் தொடங்கி கான்வென்ட் வழியாக தேனி நகராட்சி அலுவலகம் வரை சென்றது
இந்த ஊர்வலத்துக்கான ஏற்பாடுகளை மாவட்ட மகளிர் திட்ட உதவி அலுவலர்கள் செந்தில், அன்பு ராஜா ,டென்னிஸ் ஆகியோர் ஏற்பாட்டில் ஏராளமான மகளிர் விழிப்புணர்வு ஊர்வலத்தில் பங்கேற்றனர்



