பீகார் தேர்தல் வெற்றி: ஆண்டிப்பட்டியில் பாஜகவினர் பட்டாசு வெடித்து அமோக கொண்டாட்டம்
பீகார் மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில்- அதனை வரவேற்கும் விதமாக ஆண்டிப்பட்டி நகரில் பாஜக நகர, ஒன்றிய அணியினர் மற்றும் மகளிர் அணியினர் சார்பாக பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்
இது போன்ற செய்திகள் அரசு திட்டங்கள் அரசு மானியங்கள் விவசாயிகளுக்கான தகவல்கள் உங்கள் கிராமத்தில் நடக்கும் நிகழ்வுகள்,மாணவர்களுக்கு பயன்பெறும் தகவல்கள் மற்றும் பல்வேறு தகவல்கள் தெரிந்திட
https://thenitodaynews.blogspot.com/
எங்கள் whatsapp குழுவில் இணைய
வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY
தேனி மாவட்டம் வாட்சாப் குழுவில் இணைய
https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில் இதனை வரவேற்கும் விதமாக தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி நகரில் ஆண்டிப்பட்டி நகர ஒன்றிய பாஜக கட்சியினர் மற்றும் மகளிர் அணியினர் சார்பாக பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர், இதற்காக ஆரவாரமாக கோஷம் எழுப்பியபடி எம்ஜிஆர் சிலை அருகே ஊர்வலமாக வந்த பாஜகவினர் ஆண்டிப்பட்டி - தேனி சாலையில் பட்டாசு வெடித்து பேருந்துகள் வாகனங்களில் சென்ற பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர், தொடர்ந்து பிரதமர் மோடி வாழ்க , பாஜக வாழ்க என கோஷம் எழுப்பி பாஜகவினர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதோடு பொதுமக்கள் ஒவ்வொருவரிடம் இனிப்புகள் கொடுக்கும் போதும் பீகார் மாநில தேர்தலில் பாஜக வெற்றி பெற்றுள்ளது என்று தெரிவித்தனர்


