தேனி அருகே நிலப்பிரச்சனையால் டீக்கடையில் ஆசிரியரை கத்தியால் குத்திய நபர் கைது: பெரும் பரபரப்பு
கம்பம் அருகே நிலப்பிரச்சனையால் டீ கடையில் ஆசிரியரை கத்தியால் குத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது
தேனி மாவட்டம் கம்பம் அருகே காமய கவுண்டன்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் முத்துராஜா (வயது 40 )இவர் சுருளிபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார் மேலும் இவருக்கு சுருளிபட்டி பகுதியில் தோட்டம் ஒன்றும் உள்ளது . முத்து ராஜாவின் தோட்டத்துக்கு அருகில் நிலம் வைத்துள்ள ராமகிருஷ்ணன் என்பவருக்கும் முத்துராஜவிற்கும் பாத பிரச்சனை இருந்து வந்த நிலையில் அவ்வப்போது இரு குடும்பத்தினருக்கும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளதாக தெரிகிறது.
வழக்கம் போல் காலையில் ஆசிரியர் முத்துராஜா பள்ளி இடைவெளியில் அருகில் உள்ள டீக்கடைக்கு சென்றதாக தெரிகிறது அப்போது அந்த டீக்கடைக்கு வந்த ராமகிருஷ்ணன் கத்தியால் ஆசிரியர் முத்துராஜவை கத்தியால் குத்தி உள்ளார். உடனடியாக
அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஆசிரியரை மீட்டு கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பின்பு தீவிர சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளார் .
இந்த சம்பவம் அறிந்த இராயப்பன்பட்டி போலீசார் ராமகிருஷ்ணனை கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்
பட்டப்பகுதியில் டீக்கடையில் ஆசிரியரை குத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுகிறது



