போடி தொகுதியை குறிவைக்கும் தமிழக முதல்வர்: ஒருபோதும் பலிக்காது - முன்னாள் முதல்வர் கண்டனம்
தமிழகத்தில் உள்ள தொகுதிகளில் போடிநாயக்கனூர் தொகுதியானது விஜபி தொகுதியாக கருதப்படுகிறது. மேலும் இந்த தொகுதியினை 2026 தேர்தலில் வெற்றி அடைய வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறிய நிலையில் ஒரு போதும் கனவு பலிக்காது என முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ் கூறி உள்ளார்
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது இதனால் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அதற்கான பணிகளை தொடங்கி செயல்படுத்தி வருகிறார்கள் .இந்நிலையில் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலிலை முன்னிட்டு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உடன்பிறப்பே வா என்ற நிகழ்ச்சி மூலம் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகிறார். சட்டமன்றதேர்தல் இன்னும் குறைந்த மாதங்களே உள்ள நிலையில் மீண்டும் ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற நோக்கில் திமுக சார்பில் பல்வேறு செயல்பாடுகளை வழிவகுத்து தேர்தல் பணியாற்றி வருகின்றனர்
இதனால் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உடன்பிறப்பே என்ற தலைப்பில் தொகுதி வாரியாக மாவட்ட செயலாளர்கள் ஒன்றிய செயலாளர்கள் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் என முக்கிய நிர்வாகிகளை சென்னைக்கு அழைத்து வந்து அவருடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகிறார் மேலும் அந்தப் பகுதியில் உள்ள குறைகளையும் தற்போது உள்ள தொகுதி நிலவரத்தையும் கேட்டு வருகிறார். அதேபோல் இதுவரை 80 சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளை முதல்வர் மு க ஸ்டாலின் சந்தித்து ஆலோசனை நடத்திய நிலையில் தற்போது உடன்பிறப்பே நிகழ்ச்சியின் அடுத்ததாக சாத்தூர் ,போடிநாயக்கனூர் ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளுடன் 1 2 1 (ஒன் டூ ஒன்)சந்திப்பு நடத்தி தமிழக முதல்வர் ஆலோசனை நடத்திய நிலையில் தற்போது அப்பகுதியில் உள்ள நிலவரம், வெற்றி வாய்ப்பு ,தேர்தல் பணி உள்ளிட்ட பல தகவல்களை கேட்டு வருகிறார்.மேலும் தமிழக அரசு சார்பில் தற்பொழுது கலைஞர் மகளிர் உதவி தொகை, மகளிருக்கான விடியல் பயணத் திட்டம் உன்னிட்ட பல்வேறு திட்டங்கள் பொதுமக்களிடம் சென்றடைந்து மக்கள் மனதில் எப்படி உள்ளது என்பதை பற்றியும் இந்தத் திட்டங்களை மேலும் தொகுதி முழுவதும் சென்றடைய கட்சி நிர்வாகிகள் பாடுபட வேண்டும் என்றும் கூறியுள்ளார்
தமிழக சட்டமன்ற தொகுதிகளில் போடிநாயக்கனூர் தொகுதியானது விஐபி தொகுதியாக கருதப்படுகிறது ஏனென்றால் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதி தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தொகுதியாக கருதப்படுகிறது இதனால் இந்த தொகுதியில் திமுக வேட்பாளர் நிறுத்தினால் வெற்றி வாய்ப்பு உள்ளதா அல்லது கூட்டணி கட்சி சார்பில் வேட்பாளரை நிறுத்தினால் வெற்றி வாய்ப்பு உள்ளதா என்பதனை பற்றி அந்த தொகுதி நிர்வாகிகளுடன் தனித்தனியாக ஆலோசனை நிகழ்த்தி கண்டிப்பாக போடி தொகுதியினை திமுக அல்லது கூட்டணி கட்சியினர் வெல்ல வேண்டும் என்று நிர்வாகிகளுக்கு கண்டிப்பாக கூறியுள்ளார்.
இது போன்ற செய்திகள் அரசு திட்டங்கள் அரசு மானியங்கள் விவசாயிகளுக்கான தகவல்கள் உங்கள் கிராமத்தில் நடக்கும் நிகழ்வுகள்,மாணவர்களுக்கு பயன்பெறும் தகவல்கள் மற்றும் பல்வேறு தகவல்கள் தெரிந்திட
https://thenitodaynews.blogspot.com/
எங்கள் whatsapp குழுவில் இணைய
வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY
தேனி மாவட்டம் வாட்சாப் குழுவில் இணைய
https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt
இந்த தகவலை செய்தியாளர் ஓபிஎஸ் இடம் கேட்டபோது 2026 ல் நடைபெறும் போடி சட்டமன்ற தொகுதி தே ர் தலில் வெற்றி அடையும் என்ற கனவு ஒரு போதும் நடக்காது - மேலும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கனவு ஒருபோதும் பலிக்காது என்று கூறிவிட்டார்
போடி சட்டமன்றத் தொகுதி தேனி ஒன்றியம் போடி ஒன்றியம் சின்னமனூர் ஒன்றியம் என மூன்று ஒன்றியங்களை உள்ளடக்கிய தொகுதியாக கருதப்படுகிறது வருகின்ற சட்டமன்றத் தேர்தல் போடி தொகுதியானது சவால் நிறைந்த தொகுதியாக இருக்கும் என கருதப்படுகிறது





