தேனி ஆட்சியர் அலுவலகத்தில் நாட்டுமாடு நல சங்கத்தினர் அமர்வுப் போராட்டம்
கோட்டூரில் பொது நடைபாதை சந்து ஆக்கிரமிப்பு இருப்பதை அகற்றக் கோரி தொடர் அமர்வு போராட்டத்தில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நாட்டு மாடு நல சங்கத்தினர் தொடர் அமர்வு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நாட்டு மாடு நல சங்கத்தின் சார்பில் தொடர் அமர்வு போராட்டத்தில் ஈடுபட்டனர் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் கூறும் போது தேனி அருகே கோட்டூரில் பொது நடைபாதை சந்து ஆக்கிரமிப்பு அகற்ற சொல்லி தாசில்தார் தபால் அனுப்பியதாகவும் தபால் அனுப்பி 47 நாட்கள் ஆகியும் இதுவரை ஆக்கிரமிப்பினை அகற்றாத கோட்டூர் விஏஓ மற்றும் கோட்டூர் ஊராட்சி செயலாளர் ஆகியோரை கண்டித்து தொடர் அமர்வு போராட்டத்தில் ஈடுபடுவதாகம் நாட்டு மாடு நல சங்கத்தினர் தெரிவித்தனர்



