குள்ளபுரம் கிராமத்தின் அமைந்துள்ள மருதகாளியம்மன் கோயில் விழா சம்பந்தமாக அனைத்து சமுதாய மக்கள் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு
தேனி மாவட்டம் பெரியகுளம் ஒன்றியம் குள்ளப்புரம் கிராமத்தில் மருதகாளியம்மன் கோவில் விழா கும்பிடுவது அனைத்து சமுதாயம் சார்பாக ஆண்டுதோறும் நடைபெறும் கோவில் திருவிழா நடப்பது வழக்கம் இந்த ஆண்டு ஒரே ஒரு சமுதாயம் மட்டும் தனித்து விழா எடுத்து நடத்துவதால் சட்ட ஒழுங்கு பிரச்சினை நடைபெறும் என அனைத்து சமுதாய சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர் மாவட்ட ஆட்சியர் புகார் மனு மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்கள் இந்த நிகழ்வில் பெரியகுளம் அ.ம.மு.க ஒன்றிய செயலாளர் கணேசன் தலைமையில் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

