தேனி அருகே சோகம்: பஸ் மோதிய விபத்தில் பள்ளிச் சிறுமி பலி - போலீஸார் விசாரணை!
இடுக்கி மாவட்டம் செருதோனி பகுதியில் வாழை தோப்பு என்னும் பகுதியினை சேர்ந்தவர் பென் ஜான்சன்.
இவருடைய மனைவி பெயர் ஜீவா இந்த தம்பதிகளுக்கு மூன்று வயதில் எய்சால் பென் என்ற மகள்இருந்துள்ளார் .இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் மழலையார் வகுப்பில் படித்து வந்த நிலையில் காலை பள்ளிக்கு சொந்தமான பேருந்தில் வழக்கம் போல் சென்றுள்ளார். பள்ளி வளாகத்தில் காலை 9 மணிக்கு பஸ்ஸிலிருந்து இறங்கிய எய்சால் பென் அவருடன் படிக்கும் மாணவி இனாயா என்பவருடன் அருகில் நிறுத்தி இருந்த வேறொரு பள்ளி பஸ் முன்பாக நடந்து சென்று இருந்தார் .அப்பொழுது சிறுமி நடந்து செல்வதை கவனிக்காமல் நிறுத்தி வைத்திருந்த பஸ்ஸினை டிரைவர் இயக்கியதால் சிறுமியின் மீது பஸ் மோதியது. இதில் பஸ் சக்கரத்தில் சிக்கிய பள்ளி சிறுமி கால் நசங்கி சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இது குறித்து செருதோணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்



