தேனி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்: குதிரை பேரணியால் உற்சாகமான மக்கள்!

தேனியில் தமிழகத்தின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மாபெரும் குதிரை பேரணியை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்
எங்கள் whatsapp குழுவில் இணைய
விவசாயிகள் பொதுமக்கள் மாணவர்கள் அனைவரும் இணைந்திட
வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY
தேனி மாவட்டம் வாட்சாப் குழுவில் இணைய
https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt
தமிழகத்தின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு திமுக நிர்வாகிகள் சார்பில் தேனியில் பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கியும் கொண்டாடி வருகின்றனர் .இதேபோல் தேனி அருகே வீரபாண்டியில் வீரபாண்டி பேரூராட்சி சேர்மன் கீதா சசி ஏற்பாட்டில் தேனியில் முதன்முறையாக தமிழகத்தின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பொது மக்களை கவரும் வகையில் குதிரை பேரணி நடைபெற்றது .
இந்த பேரணியானது வீரபாண்டியில் தொடங்கப்பட்டது .வீரபாண்டியில் தொடங்கிய இந்த பேரணியை வீரபாண்டி பேரூராட்சி சேர்மன் கீதா சசி பங்கேற்று தொடங்கி வைத்தார்.இந்த பேரணியானது ,முத்து தேவன் பட்டி பழனிசெட்டிபட்டி ,தேனி பழைய பேருந்து நிலையம் ,பங்களா மேடு ,
என் ஆர் டி நகர், பெரியகுளம் ரயில்வே கேட் சாலை ,நகராட்சி அலுவலகம், அல்லிநகரம் ,பொம்மையைக் கவுண்டன்பட்டி ,வழியாக அன்னஞ்சி வரை சென்று மீண்டும் பைபாஸ் புது புதிய பேருந்து நிலையம் வழியாக அரண்மனைப்புதூர் வயல்பட்டி சத்திரப்பட்டி வழியாக வீரபாண்டியை வந்து அடைந்தது
.சுமார் 30 கிலோ மீட்டருக்கு மேல் குதிரை விழிப்புணர்வு பேரணியை பல்வேறு கிராமப் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். இந்த நிகழ்வில் திமுக பிரமுகர் சசிகுமார் வீரபாண்டி பேரூராட்சி திமுக செயலாளர் செல்வராஜ்,இளைஞர் அணி நிர்வாகிகள் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்





