தேனியில் நடந்த கூட்டத்தில் தீர்மானம்: VAO பதவிக்கான கல்வித் தகுதி 10-ஆம் வகுப்பிலிருந்து டிகிரிக்கு உயர்த்த கோரிக்கை
தேனியில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் தேனி மாவட்ட பொதுக்குழு மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
எங்கள் whatsapp குழுவில் இணைய
வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY
தேனி மாவட்டம் வாட்சாப் குழுவில் இணைய
https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt
இந்த அறிமுக கூட்டத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் தேனி மாவட்ட தலைவராக பிரபு. மாவட்ட செயலாளராக ராஜ்குமார் ,மாவட்ட பொருளாளராக குமரேசன் ,மாவட்ட துணை தலைவராக விஜய முருகன் ,மாவட்ட துணை செயலாளராக மகேந்திரகுமார் ,மாவட்ட கௌரவ தலைவராக ராமர் ,மாவட்ட ஒருங்கிணைப்பு செயலாளராக ஆனந்த் ,மாவட்ட செய்திதொடர்பாளராக நஜீம் கான் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டு நிகழ்ச்சியின் ஏற்புரை வழங்கினார்கள்.
புதிதாக தேர்வு செய்யப்பட்ட மாவட்ட பொறுப்பாளர்களுக்கு சங்கத்தின் மாநில தலைமை தேர்தல் ஆணையர் ராஜரத்தினம் பங்கேற்றுபுதிய மாவட்ட பொறுப்பாளர்களுக்கு சான்று வழங்கி சிறப்பித்தார்.சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் குமார் பங்கேற்று புதிய நிர்வாகிகளை கௌரவம் செய்தார்.
மேலும் இந்த கூட்டத்தில் தற்பொழுது கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கு கல்வித் தகுதியாக பத்தாம் வகுப்பு என்பதனை மாற்றி பட்டப்படிப்பு என்று மாற்றி அமைக்க வேண்டும் என்று கூறி ஒற்றை கோரிக்கையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
மேலும் இந்த நிகழ்ச்சியில் மாநில மாவட்ட வட்டார தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் பங்கேற்றனர்





