கண்டமனூர் சன்னாசியப்பன் கோவிலில் மலை உச்சியில் ஏற்றப்பட்ட திருக்கார்த்திகை தீபம்; பக்தர்கள் தரிசனம்
#கண்டமனூர் அருகே சன்னாசியப்பன் திருக்கோவிலில் திருக்கார்த்திகை பூஜை விழா நடைபெற்றது
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கண்டமா நாயக்கனூர் அருகே உள்ள வேலாயுதபுரம் கிராமம் மேற்கு மலை தொடர்ச்சி மலை பகுதியில் சன்னாசியப்பன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலில் வேலாயுதபுரம் கிராமத்தின் பொதுமக்கள் சார்பாக சன்னாசியப்பனுக்கு சிறப்பு பூஜைகளும் சிறப்பு அலங்காரமும் சிறப்பு ஆராதனைகளும் நடத்தப்பட்டது.
தொடர்ந்து மலை உச்சியின் மேல் திருக்கார்த்திகை தீபம் பக்தர்களின் ஹர ஹர கோஷங்களுடன் தீபம் ஏற்றபட்டது . தீபா ஏற்றியவுடன் கண்ட மனூர் வேலாயுதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் தங்கள் வீட்டின் முன்பாகவும் விளக்கு ஏற்றி வழிபட்டனர் முதலில் மெயின் சாலையில் உள்ள சன்னாசியப்பனுக்கு சிறப்பு பூஜைகளும் ,மலை அடிவாரத்தில் உள்ள சன்னாசியப்பனுக்கு சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டது.
இந்த சிறப்பு பூஜையில் தேனி கண்டமனூர், ஆண்டிபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் இந்த திருவிளக்கு பூஜையினை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
எங்கள் whatsapp குழுவில் இணைய
விவசாயிகள் பொதுமக்கள் மாணவர்கள் அனைவரும் இணைந்திட
வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்
https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY
தேனி மாவட்டம் வாட்சாப் குழுவில் இணைய





