நூற்றுக்கும் மேற்பட்ட வாழை மரங்களை வெட்டி தீர்த்த மர்ம நபர்கள் நடவடிக்கை எடுக்கக் கோரி விவசாயி கோரிக்கை
தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் சின்னமனூர் அருகே ஓடைப்பட்டி அருகே உள்ள மூர்த்திநாயக்கன்பட்டியே சேர்ந்தவர் செல்வராஜ் . இவர் ராணுவ வீரராக பணியாற்றி விட்டு நான்கு வருடத்திற்கு மேலாக வாழை விவசாயம் செய்து வருகிறார்.
வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்
தேனி மாவட்டம் வாட்சாப் குழுவில் இணைய
இவர் நேற்றைய தினம் தோட்டத்திற்கு
சென்று பார்த்தபோது மரங்கள் வெட்டப்பட்டு கிடந்ததை கண்டவுடன் அதிர்ச்சி அடைந்தார்.
உடனே ஓடைப்பட்டி காவல் நிலையத்தில் சென்று செல்வகுமார் என்பவர் எனது தோட்டத்தில் உள்ள சுமார் 100க்கும் மேற்பட்ட வாழை மரங்களை மர்ம நபர்கள் வெட்டியதாகவும் இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்துள்ளார்
இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இதனிடையில் .செல்வராஜ் கூறும் பொழுது நான் ராணுவ வீரராக பணியாற்றி ஓய்வு பெற்று விவசாயம் சுமார் நான்கு வருடத்திற்கு மேலாக விவசாயம் செய்து வருகிறேன்.
நேற்றைய தினம் மர்ம நபர்களால் தோட்டத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டது
இதை அறிந்து காவல்துறையிடம் புகார் அளித்தோம் வழக்கு பதிவு செய்துள்ளார்கள்.
இதுபோன்று அப்பகுதியில் தொடர்ச்சியாக நடைபெறுகிறது பைப்புகளை திருடி செல்வதாகவும் தண்ணீர் பைப்புகளை உடைப்பதாகவும் மோட்டார்களை திருடி செல்வது என அதிகமாக இந்த சம்பவங்கள் மர்ம நபர்களால் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாகவும் வாழை மரங்களை வெட்டுவது தொடர்ச்சியாகநடந்து வரும் நிலையில் விவசாய பொருட்களை வெட்டுவதும் திருடுவதும் மிகப்பெரிய ஒரு குற்றமாகவும் இதற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு பாதிக்கப்பட்ட விவசாயிக்கு நிவாரண நிதி வழங்குமாறு கோரிக்கை வைத்து வருகிறார்கள்..



