மயிலாடும்பாறையில் தென்னை விவசாயிகள் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டம்.
மயிலாடும்பாறை கிராமத்தில் தென்னை விவசாயிகள் மற்றும் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது, இந்த கூட்டத்தில் பெரியாறு வைகை பாசன விவசாய சங்க முன்னவர் சலேத்து தலைமை தாங்கி பேசினார், பொன்காட்சிகண்ணன் ,பெரியார் வைகை பாசன விவசாயிகள் சங்க செயலாளர் சாமிநாதன், ஆகியோர் முன்னிலை வைத்தனர்,
பொருளாளர் கணேசன், செயற்குழு உறுப்பினர்கள் ஞானசேகரன், பரமசிவம், மற்றும் தேனி மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய நிர்வாகிகள் ஜெயக்குமார், தென்னை விவசாய சங்க நிர்வாகி வேல்முருகன், சுருளிமுருகன், ரமேஷ், சுரேஷ், உள்ளிட்ட தென்னை விவசாயிகள் மற்றும் பாசன விவசாய சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் நியாய விலை கடைகளில் பாமாயில் வழங்குவதற்கு பதிலாக தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், நல்ல எண்ணெய், உள்ளிட்டவைகளை வழங்கப்பட வேண்டும் கடமலைக்குண்டு மயிலாடும்பாறை பகுதியில் மூல வைகை ஆற்றுப்பகுதியில் அதிகளவில் தடுப்பணைகள் கட்ட வேண்டும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட சிறப்பு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


