தேனி மாவட்டத்தில் மகளிர் உரிமைத் தொகைக்கு 53 384 நபர்கள் மேலும் மனு அளித்த கூடுதல் விபரம்
தமிழக அரசு சார்பில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தி வருகின்றது .இந்நிலையில் தமிழக மகளிர் பயன்பெறும் வகையில் மகளிர் உரிமை தொகை அறிவித்து தமிழகத்தில் பல்வேறு மகளிருக்கு மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் அறிவித்து வழங்கப்பட்டு வருகிறது .மேலும் இந்த மகளிர் உரிமைத்தொகை பல்வேறு நபர்களுக்கு சென்றடையாமல் உள்ள நிலையில் மகளிர் உரிமை தொகையில் கிடைக்கப்பெறாமல் உள்ள மகளிர் பயன்பெரும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கை வெளியிடப்பட்டது
கடந்த ஜூலை 15 ல் உங்களுடன் ஸ்டாலின்முகாம் துவங்கிய நிலையில் தங்கள் கோரிக்கைகளை அரசு சார்பில் வழங்கப்பட்ட அச்சிட்ட தாள்களை கொண்டு பூர்த்தி செய்து பொதுமக்கள் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனுக்களாக வழங்கினார்கள்
.இந்த முகாம்கள் ஒன்றிய பகுதிகளிலும் நகராட்சி பேரூராட்சிகளிலும் நடந்தது .மேலும் இந்த முகாமில் அனைத்து அரசு துறை சார்பிலும் மனுக்கள் பெற்று கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டது
.இந்த முகாம்கள் ஒன்றிய பகுதிகளிலும் நகராட்சி பேரூராட்சிகளிலும் நடந்தது .மேலும் இந்த முகாமில் அனைத்து அரசு துறை சார்பிலும் மனுக்கள் பெற்று கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டது
இந்த முகாம்கள் தேனி மாவட்டத்தில் இருகட்டங்களாக நடத்த திட்டமிட்ட நிலையில் இன்று பெரியகுளத்தில் 218 வது முகாம் நடைபெற்று வரும் நிலையில் . இந்த முகாமுடன் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நிறைவடைகிறது. இதுவரை நடந்த 217 முகாம்களில் பட்டா மாறுதல் /மின்வாரியம் ,முதியோர் உதவி தொகை ,இலவச வீடு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மனுக்களாக அளித்துள்ளனர்.
இது குறித்து அலுவலர் ஒருவர் கூறியதில்
தேனி மாவட்டத்தில் நடந்த முகாம்களில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 55 ஆயிரத்து 996 பேர் மனு அளித்துள்ளனர் என்றும், இதில் 25,136 மனுக்கள் தீர்வு காணப்பட்டுள்ளது என்றும் , 3000 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது என்றும் மற்ற மனுக்களுக்கு தீர்வு காணும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும், மேலும் முக்கியமாக இந்த முகாமில் மகளிர் உரிமைச் 53 ஆயிரத்து 384 பேர் விண்ணப்பித்து உள்ளனர் என்றும் தெரிவித்து உள்ளனார்
வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்
தேனி மாவட்டம் வாட்சாப் குழுவில் இணைய



