தேனியில் மதுபான கடை அமைப்பதற்கு தடை விதிக்கக் கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு
தேனி நகர் பகுதிகளில் பழைய பேருந்து நிலையம் மற்றும் புதிய பேருந்து நிலையம் ஆகிய இரண்டு பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது.மேலும் பழைய பேருந்து நிலையத்துக்கு மதுரை பகுதியில் இருந்து வரும் போக்குவரத்து வாகனங்களும்,திண்டுக்கல்,பெரியகுளம் பகுதியில் இருந்து வரும் வாகனங்களும் ,பழைய பேருந்து நிலையத்துக்கு வாகனங்கள் அனைத்தும் வருகை புரிந்து கம்பம் சின்னமனூர் போடி மூணாறு குமுளி மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு வாகனங்கள் செல்வதற்கு வழித்தடமாக செயல்பட்டு வருகிறது.
இதனால் பொதுமக்கள் அதிகமாக வந்து செல்லும் இடமாகவும் பழைய பேருந்து நிலையம் பகுதி அமைந்துள்ளது இந்தப் பகுதிகளில் பொதுமக்களின் வசதிக்காக வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.மேலும் பழைய பேருந்து நிலையம் அருகே ஜமீன்தார் காம்ப்ளக்ஸ் பகுதிகளில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வரும் நிலையில் தற்பொழுது மதுபான கடை அமைப்பதற்கு அந்த பகுதிகளில் ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் அந்தப் பகுதிகளில் மதுக்கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேனி மாவட்ட வனிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் தேனி மாவட்ட தலைவர் செல்வகுமார் தலைமையில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு வழங்கினார்கள் .
இந்த மனுவில் ஜமீன்தார் காம்ப்ளக்ஸ் பகுதிகளில் பெண்கள் குழந்தைகள் மாணவர்கள் பொதுமக்கள் என ஏராளமானவர்கள் வந்து செல்லும் இடமாக இருப்பதினால் மதுக்கடை இந்த பகுதிகளில் அமைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறி மனு அளித்தனர்



