தேனியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில்பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜையை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டது
தேனி பழைய பேருந்து நிலையம் அருகே அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் சார்பில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118 வது ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது முதலில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவப்படத்துக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் நாகராஜ் பொருளாளர் கோட்டைச்சாமி வழக்கறிஞர் விக்னேஷ், துணைத் தலைவர் அன்பழகன், தேனி நகர செயலாளர் பிரசாந்த் , செயற்குழு உறுப்பினர் மாறன் மாவட்ட பொறுப்பாளர் பசும்பொன் செல்வம் ஆகியோர் பங்கேற்ற இந்த குருபூஜை விழாவில் வழக்கறிஞர் சங்கத் தலைவர் முத்துராமலிங்கம் ,விடுதலை சிறுத்தைகள் கட்சி தேனி நகர செயலாளர் ஈஸ்வரன் மாவட்ட செய்தி தொடர்பாளர் அன்பு வடிவேல் மாவட்ட பொறுப்பாளர் கண்ணம்மா முருகன் ,இந்து எழுச்சி முன்னணியின் மாவட்டத் தலைவர் ராமராஜன்,ஆகியோர் பங்கேற்று பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வரலாற்று கூறி கோசங்களை எழுப்பி மரியாதை செலுத்தினார்கள்.
தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் இந்த நிகழ்வில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி நிர்வாகிகள்,தேனி மாவட்ட எஸ்ஆர்டி இளைஞரணி நிர்வாகிகள்,இந்து எழுச்சி முன்னணி நிர்வாகிகள் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் இந்த நிகழ்வில் பங்கேற்றன
ர்






