தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.சங்கத்தின் மாநில துணைத்தலைவர் பேயத்தேவன் தலைமையிலும் ,மாவட்டத் துணைத் தலைவர் பெருமாள் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் வட்டார மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வு போதுமானதாக கோரிக்கையாக கருத்தில் கொண்டு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் , அரசு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மூலம் இஎஸ்ஐ மற்றும் பி எப் பலன்கள் அனைவருக்கும் வழங்க வேண்டும் என்றும்
,துப்புரவு பணியாளர்கள் தூய்மை காவலர்கள் ஓ எச் டி ஆபரேட்டர்கள் ஆகியோரின் பகுதிநேர குறைந்தபட்ச ஊதிய கோரிக்கையில் குறைந்தபட்ச ஊதிய விகிதத்தின் படி ஊதியம் வழங்க வேண்டும் என்றும் ,சுகாதார ஊக்குனர்களுக்கு நிலுவையின்றி ஊதியம் வழங்க வேண்டும் என்றும், பத்து ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்த வட்டார மாவட்ட ஒருங்கிணைப்பாளரை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .மாவட்டத் தலைவர் முருகானந்தம் வரவேற்புரை நிகழ்த்திய இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன் மாவட்ட பொது செயலாளர் ராஜ்குமார் மாவட்ட தலைவர் ஏ ஐ டி யு சி பாண்டி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் முருகேஸ்வரன் மயில் ,உமா மகேஸ்வரி மாவட்ட பொருளாளர் பாரதிராஜா ஆகியோர் நன்றி உரை நிகழ்த்திய இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரியகுளம் ஈஸ்வரன் ,சின்னமனூர் முருகன், தேனி மணிவண்ணன் ,உத்தமபாளையம் முருகேசன், தேனி பிரகாஷ் மற்றும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை தொழிலாளர் சங்கத்தின் தேனி மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்



