Type Here to Get Search Results !

மிளகாய் அரைத்து வழிபாடு செய்தால் நினைத்த காரிியம் நிறைவேறும் -கோவில் பாறை மாசாணி அம்மன் திருக்கோவில் வரலாறு

மிளகாய் அரைத்து வழிபாடு செய்தால் நினைத்த காரிியம்  நிறைவேறும் -கோவில் பாறை மாசாணி அம்மன் திருக்கோவில் வரலாறு


கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று நமது முன்னோர்கள் அன்று முதல் இன்று வரை கூறி வருகின்றனர். அந்த அளவுக்கு கோவில்கள் இருந்தால் தான் அந்த கிராமத்துக்கே அழகு என்றும் ,நிம்மதியும் உள்ளது என்றும் நம் முன்னோர்கள் அறிந்து வைத்துள்ளனர் .


இந்த திருக்கோவில்கள் ஒரு இடத்தின் அமைப்பு, மூலவர் உற்சவர் தகுந்தவாறு பக்தர்களுக்கு வேண்டிய வரம் கிடைக்கும் வகையில் அமைகின்றது .பழனி என்றால் பஞ்சாமிருதமும் திருப்பதி என்றால் மொட்டை என்பதும் அனைவரும் அறிந்த தகவலாக உள்ளது.பொள்ளாச்சி அருகே மாசாணி அம்மன் திருக்கோவில் உலகில் மிக பிரசித்தி பெற்ற திருக்கோவிலாகும் .இந்த திருக்கோவிலில் அம்மன் படுத்த நிலையில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பது மிக சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.பில்லி சூனியம் திருட்டு,செய்வினை கோளாறுகள் போன்றவற்றை போக்கும் அம்மனாகவும் மாசாணி அம்மன் திகழ்கிறது.



நீதிக்கும் நேர்மைக்கும் மிகச்சிறந்த அம்மனாக மாசாணி அம்மன் திகழ்வதால் பக்தர்கள் நீதிக் கல்லில் மிளகாய் அரைத்து பூசி வழிபாடு செய்து தன் நியாயங்களுக்கு சரியான செயல்பாடுகள் நடைபெற வேண்டும் என்று கூறி வழிபாட்டு சென்று வருகின்றனர்.

இப்படி மாசாணி அம்மனுக்கு பல்வேறு சிறப்புகள் இருந்து வரும் நிலையில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் பொள்ளாச்சிக்கு செல்வது கடினம் .தென் மாவட்டத்திலும் அதிலும் தேனி மாவட்டத்தில் மாசாணி அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகிறார் 

வேலைவாய்ப்பு மற்றும் பல்வேறு அறிய தகவல்கள் தெரிந்திட whatsapp குழுவில் இணைவோம்

https://chat.whatsapp.com/CHBuYVhiL5yHDco7UfwOGY

தேனி மாவட்டம் வாட்சாப் குழுவில் இணைய

https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt   

அமைவிடம்


இந்த திருக்கோவில் தேனி மாவட்டத்தில்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டத்தில் வருசநாடு அருகே பஞ்ச தாங்கி மலை அடிவாரத்தில் கோவில் பாறை என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது.தேனி பழைய மற்றும் புதிய பேருந்து நிலையத்திலிருந்து கடமலைக்குண்டு மயிலாடும் பாறை வழியாக மாசாணி அம்மன் திருக்கோவிலுக்கு பஸ் வசதியும் உள்ளது .இந்த திருக்கோவில் தங்கம்மாள்புரம் உப்புத்துறை செல்லும் வழியில் கோவில் பாறை என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது





பூஜைகள்

மேலும் இந்த திருக்கோவிலில் அம்மனுக்கு தினசரி பூஜைகளும் அமாவாசை பௌர்ணமி மற்றும் முக்கிய தினங்களில் சிறப்பு பூஜைகளும் நடைபெறுவது வழக்கம்


பரிவார தெய்வங்கள்

இந்த திருக்கோவிலில்மாசாணி அம்மன் படுத்த நிலையில் பக்தர்களுக்கு அருள் புரிந்து மூலவராக விளங்கி வருகிறார் மேலும் செல்வவிநாயகர் பாலமுருகன் ஆஞ்சநேயர் நாகம்மாள் வாராஹி அம்மன் சந்தனக் கருப்பு போன்ற பரிவார தெய்வங்களும் இந்த திருத்தளத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து அருள் புரிந்து வருகின்றனர் .இந்த திருக்கோவிலில் அனைத்து மூல தெய்வங்களும் உள்ளதினால் தினசரி இந்த திருக்கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.




பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்களில் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து சுவாமி தரிசனம் செய்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் படி வணங்கி செல்கின்றனர்.

தினசரி சிறப்பு அலங்காரம் சிறப்பு பூஜைகள் நடைபெறும் நிலையில் அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் பல்வேறு தீர்த்த தளங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரை ஊற்றி சிறப்பு யாகங்கள் செய்தும் பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றனர்

இந்த சிறப்பு யாகத்தில் பக்தர்கள் பங்கேற்று நவதானியங்கள் மற்றும் பூஜை பொருட்களை யாகசாலையில் போடும் பொழுது தங்கள் மனதில் உள்ள தீராத காரியங்களும் நிறைவேறும் என்றும் கூறப்படுகிறது.

பக்தர்கள் மாசாணி அம்மனுக்கு எலுமிச்சை மாலை அணிவித்தும் மஞ்சள் சேலையை சாத்தி வணங்கி செல்கின்றனர்


மேலும் இந்த திருக்கோவிலில் மாசாணி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் சிறப்பு யாகங்கள் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அங்கே உள்ள நீதி கல்லில் மிளகாய் வற்றலை அரைத்து தன் எந்த எண்ணத்துக்காக வந்தோமோ அதை நினைத்துக் கொண்டே அரைத்தால் அந்த காரியம் கண்டிப்பாக நிறைவேறும் என்றும் கூறப்படுகிறது.

இப்படி தென் மாவட்ட பக்தர்கள் அதிகளவு சென்று சுவாமி தரிசனம் செய்யும் இடமாக மாசாணி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளதால் அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் இந்த அம்மனை தரிசனம் செய்யும்போது தீராத நோய்களும் குறையாத செல்வம் நம் மனதில் நினைத்துக் கொண்டிருக்கும் நீதியும் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது





இந்நிலையில் (2025) புரட்டாசி மாதத்தின் அமாவாசையான மகாளய அமாவாசையை முன்னிட்டு மாசாணி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகளும் சிறப்பு ஆராதனைகளும் நடைபெற்றன .மேலும் இந்த சிறப்பு பூஜை முன்னிட்டு முதலில் சிறப்பு யாகங்கள் நடத்தப்பட்டது இந்த யாகத்தினை தொடர்ந்து புண்ணிய தீர்த்தங்கள் கருப்புசாமி விநாயகர் முருகன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு ஊற்றியும் மூலவர் மாசாணி அம்மனுக்கு ஊற்றியும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.இந்த சிறப்பு பூஜையினை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர் . இந்த சிறப்பு பூஜையில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் சிறப்பு அன்னதானமும் வழங்கப்பட்டது

 உங்கள் திருக்கோவில் வரலாறு மற்றும் உங்கள் கிராமங்களின் வரலாறு இடம்பெற தொடர்பு கொள்ளவும் - உங்கள் கிராம செய்திகள் அனைத்தும் இலவசமே

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Top Post Ad

விளம்பரப் படம் - KST Store