போடியில் ஆதித்தமிழர் பேரவை சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
தேனி மாவட்டம் போடியில் வசித்து வரும் அருந்ததிய மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்று கூறி போடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆதித்தமிழர் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது அதனை தொடர்ந்து போடி தாசில்தாரை சந்தித்து மனு அளித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டமானது மாவட்ட செயலாளர்(மே) மாவீரன் தலைமையிலும் ,போடி நகர செயலாளர்,அ. வினோத் போடி ஒன்றிய செயலாளர் ஆ.மாரி ,மாவட்ட நிதி செயலாளர்(மே)மா.உமா மகேஸ்வரி ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தின் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் மா.ஈஸ்வரன் மாவட்ட செயலாளர்(மே) நகர மகளிர் அணி மா.நீலக்கனலன் ,போடி நகர செயலாளர் ர.முருகேஸ்வரி ,போடி நகர தலைவி செ.லட்சுமி ,கொள்கை பரப்புச் செயலாளர் ச.முருகேஸ்வரி துணை தலைவி ராணி மற்றும் 30க்கு மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.


