தேனியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.17.72 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்
தேனி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெயபாரதி அவர்கள் தலைமையில் (12.03.2024) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வங்கிக்கடன், மாதாந்திர உதவித்தொகை, உபகரணங்கள் வேலைவாய்ப்பு மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 96 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை மனுக்களை வழங்கி மனுக்கள் மீது குறித்த காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
மேலும், இக்கூட்டத்தில் தலா ரூ.96,011 மதிப்பிலான நான்கு சக்கர வாகனம் 16 நபர்களுக்கும், தலா ரூ.1.13 இலட்சம் மதிப்பிலான சிறப்பு மாற்றுத்திறனாளி வாகனம் 2 நபர்களுக்கும், திருமண நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் 3 மாற்றுத்திறனாளி பெண்களுக்கு தலா 8 கிராம் தங்க நாணயமும், ரூ.7900/- மதிப்பிலான சக்கர நாற்காலி ஒரு நபருக்கும், தலா ரூ.580/- மதிப்பிலான ஊன்றுகோல் 2 நபர்களுக்கும் என மொத்தம் 24 பயனாளிகளுக்கு ரூ.17.72 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கினார்.
இக்கூட்டத்தில் தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) திரு.முரளி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி காமாட்சி, மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


