மக்கள் நினைத்தால் ஓபிஎஸ் நாடாளுமன்றத் தேர்தலில் நிற்க வாய்ப்பு உண்டு ரவீந்திரநாத்
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி மையத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் உள்ளூர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2023 2024 வருடத்தின் கீழ் ரூ 45 லட்சம் மதிப்பீட்டில் அணுகுசாலை அமைப்பதற்கான தொடக்க விழா நடைபெற்றது இந்த விழாவில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் பங்கேற்று தொடங்கி வைத்தார்
அதனை தொடர்ந்து செய்தியளர்கள் சந்திப்பில் மக்கள் நினைத்தால் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் நிற்க வாய்ப்புண்டு என்றும், 2019ல் நடைபெற்ற தேர்தல் வாக்குறுதியில் கூறிய கோரிக்கைகள் நிறைவேற்றபட்டு உள்ளது . மேலும் கோரிக்கைகள் நிறைவேற்ற வேண்டும் என்றால் மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று கோரிக்கைகளை நிறைவேற்றுவேன் என்றும் , தேர்தலில் யார் வேண்டுமானால் நிற்கலாம் என்றும் பாஜக கட்சியுடன் தற்போது தேர்தல் குறித்து கூட்டணி வைப்பதற்கும் சுமூகமான முறையில் ஆலோசனை நிகழ்த்தப்பட்டு வருகிறது என்றும் கூறினார் .
மேலும் இந்த நிகழ்வில் தேனி அரசு தொழிற்பயிற்ச்சி மையத்தின் முதல்வர் சேகரன் , தொழிற்பயிற்சி நிலையத்தின் ஆசிரியர்கள் மாணவர்கள் ஓபிஎஸ் அணி அதிமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்



