பார்வைக்குறைபாடு மற்றும் செவித்திறன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளிகள் ஸ்மார்ட்போன் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்
தேனி மாவட்டம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 18 வயது முதல் 70 வயது வரையுள்ள பார்வையற்றோர்/பார்வைக்குறைபாடுடையோர் மற்றும் செவித்திறன் குறைபாடுடையோர்/காதுகேளாத மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு ஸ்மார்ட் போன் வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் பயன்பெற பார்வையற்றோர்/பார்வைக்குறைபாடுடையோர்/ செவித்திறன் குறைபாடுடையோர்/காதுகேளாத மாற்றுத்திறனாளிகள் தங்களது மாற்றுத்திறனாளி அடையாள அட்டை நகல், UDID அட்டை நகல், ஆதார் நகல், குடும்ப அட்டை நகல், புகைப்படம் -2 மற்றும் கல்லூரியில் பயிலும் சான்று / சுயதொழில் புரியும் சான்று / நிறுவனத்தில் பணிபுரியும் சான்று ஆகியவற்றுடன் 06.03.2024 - க்குள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திற்கு (மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் பின்புறம்) நேரில் சென்று விண்ணப்பிக்கலாம்.
மேலும், இதுதொடர்பான விபரங்களுக்கு 04546-252085 என்ற தொலைப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா தெரிவித்துள்ளார்கள்.


