பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் தொடர்பான விதிமீறல்களுக்கு புகார் தெரிவிக்கலாம் என தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவிப்பு
பாராளுமன்றத் தேர்தல்-2024 முன்னிட்டு தேர்தல் தொடர்பான விதிமீறல்களுக்கு தேர்தல் பார்வையாளர்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் – மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்.
எதிர்வரும் மக்களவை பொதுத்தேர்தல்-2024-யை முன்னிட்டு 33.தேனி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 190-சோழவந்தான், 197-உசிலம்பட்டி, 198-ஆண்டிபட்டி, 199-பெரியகுளம், 200-போடிநாயக்கனூர் மற்றும் 201-கம்பம் சட்டமன்ற பகுதிகளுக்கு தேர்தல் பொதுபார்வையாளராக திரு.கெளரங் பாய் மக்வானா. இ.ஆ.ப அவர்கள் மற்றும் காவல் பார்வையாளராக திரு.ஸ்ரீஜித்.இ.கா.ப அவர்கள் இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமனம் செய்யபட்டுள்ளனர்.
எனவே, மேற்படி சட்டமன்ற பகுதிகளில் தேர்தல் தொடர்பான விதிமீறல் மற்றும் புகார்கள் குறித்து பொதுமக்கள்/அரசியல் கட்சியினர் புகார் அளிக்க தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள சுற்றுலா மாளிகையில், அறை எண்.1-ல் காலை 9.00 மணி முதல் 10.00 வரை மற்றும் மாலை 6.00 மணி முதல் 7.00 மணி வரை பொதுப்பார்வையாளரை நேரிலும், மேலும் தேர்தல் பொதுபார்வையாளராக திரு.கெளரங் பாய் மக்வானா. இ.ஆ.ப அவர்கள் 94420 25611 என்ற தொலைபேசி எண்ணிலும், காவல் பார்வையாளரை திரு.ஸ்ரீஜித்.இ.கா.ப அவர்கள் 94420 30318 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👍👍👍இந்த குருப்பில் தேனி மாவட்டத்தினை சேர்ந்த நண்பர்கள் அணைவரும் இணையலாம் - . மேலும் உங்கள் கிராமத்தில் தன்னீர் பிரச்சனை, சாலை , மற்றும் அனைத்து பிரச்சனைகள் குறித்து தகவல்கள் தெரிவித்தால் செய்தியாக வெளியிடப்படும் , மேலும் தங்கள் கிராமத்தில் திருவிழா, அரசு சார்ந்த நிகழ்ச்சி, மருத்துவ முகாம் , கணக்கெடுக்கும் பணி, கால்நடை சம்பந்தமான நிகழ்வுகள் மற்றும் தங்கள் கிராமத்தில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளும் தகவல் கூறினால் செய்தியாக வெளியிடப்படும்👍
தேனி மாவட்ட தகவல் பார்த்திட
https://thenitodaynews.blogspot.com/?m=1
.
வாட்சாப் குழுவில் இணைய
https://chat.whatsapp.com/LXBEEZWpSrdJ0BBenX2BOt
👍👍👍👍 👍👍👍👍👍👍
வேலை வாய்ப்பு , அரசு தகவல்கள் , விவசாயிகளுக்கான தகவல்கள் மற்றும் பயனுள்ள தகவல் தளத்தில் இணைய


