கடமலைக்குண்டு கிராமத்தில் தேமுதிக கட்சி சார்பில் நினைவேந்தல் பொதுக்கூட்டம்.
கடமலைக்குண்டு கிராமத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் நினைவேந்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் அதிமுக கட்சியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் தேமுதிக கட்சியில் இணைந்தனர் இந்த நிகழ்ச்சியின் போது தேமுதிக கடமலைக்குண்டு மயிலாடும்பாறை ஒன்றிய செயலாளர் நாகர் தலைமை தாங்கி பேசினார், சிறப்பு விருந்தினர்களாக தேமுதிக மாவட்ட செயலாளர் எம் என் கிருஷ்ணமூர்த்தி, தேனி மாவட்ட தலைவர் மாயி, மாவட்ட பொருளாளர் முகமது, ஆகியோர் முன்னிலை வகித்தனர், மேலும் அதிமுக கட்சியில் இருந்து விலகி தேமுதிக கட்சியில் 50க்கும் மேற்பட்டோர் கடமலைக்குண்டு பரமராஜ், ராமர் ஆகியோர் தலைமையில் இணைந்தனர், இதனை தொடர்ந்து ஏழை எளியவர்களுக்கு அன்னதான நிகழ்ச்சியும் நடைபெற்றது, இது குறித்து தேமுதிக மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி பேசுகையில் ஏழை எளியவர்களின் விடிவெள்ளியாக திகழ்ந்தவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் ஏழை எளியவர்களுக்கு தினந்தோறும் அன்னதானம் வழங்கி சிறப்பித்து வந்தார் இதேபோல் இன்றுவரையும் அன்னதானம் நிகழ்ச்சியும் சென்னையில் நடைபெற்று வருகிறது இது ஏழை எளிய மக்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் ஒரு மாசற்ற கொள்கை உள்ள கட்சி என்றால் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்றாலும் மிகையல்ல எனவே வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் எங்கள் தேமுதிக கட்சிக்கு முழு ஆதரவு தாருங்கள் அனைத்து பொது மக்களுக்கும் அடிப்படை வசதிகளும் செய்து தருவதற்கு நாங்கள் எப்போதும் காத்திருக்கிறோம் என தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியின் போது பிரேமா டீ ஸ்டால் மணி வருசநாடு கண்ணன் வருசநாடு ரவி உள்ளிட்ட தேமுதிக கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

