தேனி பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் செலவினம் தொடர்பான விதிமீறல்கள் குறித்து புகார் அளிக்கலாம் என அறிவிப்பு
பாராளுமன்றத் தேர்தல்-2024 முன்னிட்டு தேர்தல் செலவினம் தொடர்பான விதிமீறல்களுக்கு தேர்தல் செலவின பார்வையாளர்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் – மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்.
பாராளுமன்ற பொதுத்தேர்தல்-2024-யை முன்னிட்டு 33.தேனி பாராளுமன்ற தொகுதிக்கு இந்திய தேர்தல் ஆணையத்தால் தேர்தல் செலவின பார்வையாளர்களாக தர்ம்வீர் தண்டி, IRAS விஜேந்திர குமார் மீனா, IRS (C&CE) ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
190.சோழவந்தான்(தனி), 197.உசிலம்பட்டி, 198.ஆண்டிபட்டி, சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் செலவின புகார்கள் தொடர்பாக தகவல் தெரிவிப்பதற்கு தர்ம்வீர் தண்டி, IRAS அவர்களை 83005 76485 என்ற தொலைப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு, புகார் தெரிவிக்கலாம்.
199.பெரியகுளம்(தனி), 200.போடிநாயக்கனூர் மற்றும் 201.கம்பம் சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் செலவின புகார்கள் தொடர்பாக தகவல் தெரிவிப்பதற்கு திரு.விஜேந்திர குமார் மீனா, IRS (C&CE) அவர்களை 94428 62007 என்ற தொலைப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு, புகார் தெரிவிக்கலாம் என தேனி மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது


