வருசநாடு பகுதியில் அதிமுக வேட்பாளர் முக்கிய நிர்வாகிகள் சந்தித்து வாக்கு சேகரிப்பு.
தேனி நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் நாராயணசாமி ஆண்டிபட்டி ஒன்றியம் மற்றும் கடமலை - மயிலை ஒன்றியத்திற்குட்பட்ட அதிமுக கட்சி மற்றும் கூட்டணி கட்சி முக்கிய நிர்வாகிகளை நேரில் சந்தித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
இந்நிலையில்
தேனி நாடாளுமன்ற அதிமுக வேட்பாளர் நாராயணசாமி அவர்கள் நேற்று ஆண்டிபட்டி ஒன்றிய கழகச் செயலாளர்கள் லோகிராஜன் , வரதராஜன் தலைமையில் உள்ள ஒன்றிய கழக நிர்வாகிகளையும் சந்தித்து இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார். பின்னர் கடமலை-மயிலை வடக்கு ஒன்றிய செயலாளர் செந்தட்டிக்காளை தலைமையில் ஒன்றிய கழக நிர்வாகிகளையும், கடமலை-மயிலை தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் வருசை ராமர் தலைமையில் ஒன்றிய கழக நிர்வாகிகளையும் சந்தித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டார்.
பின்னர் தேமுதிக கூட்டணி கட்சி முக்கிய நிர்வாகிகள் பரமராஜ், ஒன்றிய செயலாளர் நாகர், ராமர் அனைவரையும் கடினமாக உழைத்து இரட்டை இலை சின்னத்தை வெற்றி பெற செய்ய வேண்டும் என கூட்டத்தில் பேசினார் . இதில் தேனி கிழக்கு மாவட்ட செயலாளர் முறுக்கோடை ராமர் , மேற்கு மாவட்ட கழக செயலாளர் ஜக்கையன், மாநில ஜெ, பேரவை செயலாளர் ஜெயக்குமார், மாவட்டத் துணைச் செயலாளர் சோலைராஜ், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் பாலசுப்பிரமணி, ஒன்றிய துணைச் செயலாளர் பிரேம்ஆனந்தன், மாவட்ட தொழிற்சங்க பேரவை தலைவர் சுப்புராஜ், ஒன்றிய கழக அவைத் தலைவர் ராமர், ஒன்றிய ஜெ,பேரவை செயலாளர் பாண்டியன், மகளிர் அணி நிர்வாகிகள் சுமதி, சாந்தி, கிளைக் கழக நிர்வாகிகள் முருகவேல் தென்னரசன், சோதிபாசு, பந்தல்ராஜா, மாஸ்டர்செல்வா, பழனிச்சாமி, சேகர் மலைச்சாமி கண்ணன் வீரமணி உள்ளிட்ட அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



